முல்லை நகுதல்
குறுந்தொகை 126, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல் புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறாக
நகுமே தோழி நறும் தண் காரே.
Kurunthokai 126, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
He did not think about youth
when he went desiring wealth.
He has not come back and I
wonder where he is.
The clusters of bright buds,
on the mullai vines that bear
flowers, nurtured by the fragrant,
cool rain, appear to laugh at me,
my friend.
Notes: The heroine who was sad on seeing the rainy season, said this to her friend. பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்குச் சொல்லியது. இரா. இராகவையங்கார் உரை – முல்லை நகும் என்பதற்கு ஏது தலைவர் அம்முல்லையைக் காட்டி ‘மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என’ (நற்றிணை 316) கூறிச் சென்றாராதலால் அவரை நம்பி ஆற்றியிருந்தது பற்றியெனக் கொள்ளத்தகும். இங்ஙனம் கொள்ளாது ‘முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக நகுமே தோழி நறும் தண் காரே’ என்று பாடம் கொள்ளின் முல்லையின் திரண்ட முகைகள் விளங்கிய பற்கள் போலாக நறுந்தண் கார் ஒலிக்கும் என்று பொருள் கொள்க. கார் நாற்பதில் (14) ‘முல்லை இலங்கு எயிறின் நறுந்தண் கார் மெல்ல இனிய நகும்’ என வந்த இடத்து பழைய உரைக்காரர், ‘முல்லைக் கொடிகள் விளங்குகின்ற மகளிர் பற்களைப் போன்ற அரும்புகளை ஈனும்படி அழகிய குளிர்ந்த மேகங்கள் இனியனவாய் மெதுவா ஒலியா நின்றன’ எனப் பொருள் கூறுதல் காண்க. பெயல் புறந்தந்த முல்லை என்றாள் தனக்கு அம் மழை இப்பொழுது பகையாய் வருந்துதல் குறித்து. பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என.
Meanings: இளமை பாரார் – he did not consider youth, வள நசைஇச் சென்றோர் – he went with the desire for wealth (நசைஇ – சொல்லிசை அளபெடை), இவணும் வாரார் – he has not come back here (உம்மை – உயர்வு சிறப்பு), எவணரோ வென – I wonder where he is, பெயல் புறந்தந்த – protected by the rain, பூங்கொடி முல்லை – jasmine vines that bear flowers, Jasminum sambac, தொகு முகை – buds in clusters, இலங்கு எயிறாக – as bright teeth, நகும் – they will laugh (at me), ஏ – அசைநிலை, an expletive, தோழி – my friend, நறும் தண் கார் – this fragrant cool rainy season, ஏ – அசைநிலை, an expletive
குறுந்தொகை 162, கருவூர்ப் பவுத்திரனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
கார் புறத்தந்த நீருடை வியன் புலத்துப்
பலர் புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.
Kurunthokai 162, Karuvūr Pavuthiranār, Mullai Thinai – What the hero said to the jasmine flower
May you live long, O jasmine!
At this dull evening time when
everyone returns to their homes
across the vast, water-filled
woodlands protected by the clouds,
you with your little white buds seem
to laugh at those who are lonely.
Is this the right thing for you do to?
Notes: The hero who was returning home after finishing his assignment, said this to a jasmine flower. வினை முற்றி மீளும் தலைவன் முல்லையிடம் உரைத்தது. பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.
Meanings: கார் புறந்தந்த – protected by the clouds, நீருடை – water filled, வியன் புலத்து – in the vast woodlands, பலர் புகுதரூஉம் – when many enter (புகுதரூஉம் – இன்னிசை அளபெடை), புல்லென் மாலை – dull evening, sad evening, முல்லை வாழி – may you long live O jasmine, Jasminum sambac, ஓ – அசைநிலை, an expletive, முல்லை – O jasmine, நீ – you, நின் – your, சிறு வெண் – small white, முகையின் – with your buds, முறுவல் கொண்டனை – you are smiling, நகுவை போலக் காட்டல் – appearing like laughing, appearing like teasing (காட்டல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், காட்டாற்க என்றவாறு), தகுமோ – is this fitting, மற்று – அசைநிலை, an expletive, இது – this, தமியோர் மாட்டு – to those who are lonely, ஏ – அசைநிலை, an expletive
குறுந்தொகை 186, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை, – தலைவி தோழியிடம் சொன்னது
ஆர்கலி ஏற்றொடு கார் தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.
Kurunthokai 186, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
My eyes have abandoned sleep,
my friend,
because of the man from the country,
where along with roaring thunder,
heavy rains pour in the delicate forests,
where mullai buds on tender vines
appear like teeth.
Notes: The heroine aid this on noticing signs of the rainy season. பருவங் கண்டு தலைவி கூறியது. பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings: ஆர்கலி ஏற்றொடு – with very loud thunder, கார் தலைமணந்த – rain clouds rained and mixed (தலை – அசைநிலை, an expletive), கொல்லை புனத்த – in the woodlands, in the forests, முல்லை மென் கொடி – delicate jasmine vines, Jasminum sambac, எயிறு என முகைக்கு – have put out buds that appear like teeth (முகைக்கு – முகைக்கும்), நாடற்கு – because of the man from such country, துயில் துறந்தனவால் – they have abandoned sleep (துறந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive), தோழி – O friend, என் கண் – my eyes, ஏ – அசைநிலை, an expletive
நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 588
போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழீ! அவன் தார் செய்த பூசலையே.
நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 600
முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய்! உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே?