மாட்டின் மணி ஒலி தரும் துன்பம்

குறுந்தொகை 86, வெண்கொற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப்
பிறரும் கேட்குநர் உளர் கொல் உறை சிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.

Kurunthokai 86, Vennkotranār, Kurinji Thinai – What the heroine said to her friend, when the hero was not with her
I am worried and alone,
with love’s painful disease
so difficult to bear,
and my red-veined eyes
drop welled-up tears.

Are there others like me,
who hear the soft jingling
of curved bells with clappers,
tied on cows that shake
their heads again and again
to chase the buzzing flies,
in this blustery cold night
with heavy rains and
harsh northerly winds?

Meanings:   சிறை – wall, dam, பனி – water, உடைந்த – broke, சேயரி – red lines, மழைக் கண் – crying eyes, பொறை அரு – difficult to bear, நோயொடு – with love disease, புலம்பு அலை – alone in sorrow, கலங்கி – confused, பிறரும் கேட்குநர் உளர் கொல் – are there others who will hear, உறை சிறந்து – heavy rains, ஊதை தூற்றம் – northerly winds with spray, கூதிர் யாமத்து – in the cold night, ஆன் – cow, நுளம்பு – flies, Musca domestica, உலம்பு தொறு – whenever they buzz around, உளம்பும் – makes noise, நா நவில் – ringing from the clappers, கொடு மணி – curved bells, harsh bells, நல்கூர் குரலே – soft sounds

குறுந்தொகை 190, பூதம்புல்லனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறி வளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர்
அறிவர் கொல் வாழி தோழி பொறி வரி
வெஞ்சின அரவின் பைந் தலை துமிய
உரவுரும் உரறும் அரை இருள் நடு நாள்
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே.

Kurunthokai 190, Poothampullanār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Will he who stroked my thick,
black hair and wide shoulders,
and caused my stacked bangles
to slip off
as he departed to earn wealth,

hear
the tinkling of a single bell
whenever a fine bull,
in a stable with many cows, moves

in the middle of the night
when thunder rumbles, cutting
off the green heads of snakes.

Meanings:   நெறி இருங்கதுப்பொடு – with thick black hair, பெருந்தோள் நீவி – stroked my large shoulders, செறி வளை நெகிழ செய்- stacked bangles to slip, பொருட்கு அகன்றோர் – one who parted to earn wealth, அறிவர் கொல் – does he understand, வாழி தோழி – may you live long my friend, பொறி வரி வெஞ்சின அரவின் – very angry snakes with spots and lines, பைந் தலை துமிய – their green heads to be cut off, உரவுரும் உரறும் – roaring thunder, அரை இருள் நடு நாள் – in the middle of the night, நல் ஏறு இயங்குதொறு – whenever the fine bull moves, இயம்பும் – rings, பல் ஆன் தொழுவத்து – in the stable with many cows, ஒரு மணிக் குரலே – the tinkling of one bell

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1694, தலைவி சொன்னது
கலங்க காக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம்
மலங்க வெஞ் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால்
இலங்கு வெங் கதிர் இள மதி அதனொடும் விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி விளைவது ஒன்று அறியேனே!