பல்லி நிமித்தம் – Lizard Omen

நற்றிணை 246, காப்பியஞ் சேந்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை
வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ
இன்னிசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே.

Natrinai 246, Kāppiyan Chēnthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
There are sweet omens here!
A lizard on the tall wall
clucks, and a black cuckoo
that is adept in singing, sits
on a huge branch of a nochi tree
in our house yard, and sings
in the way it has learned to sing.

He went past several wasteland
paths to earn wealth, with a
strong mind.  He is not a liar.
He will come back!
May you live long, my friend!

In the forest, golden kondrai and
nearby pidavam flowers have opened.
There is sweet rumbling in the skies.
This is the seaon for him to return!

Meanings:  இடூஉ – as expected, ஊங்கண் – there, இனிய படூஉம் – sweet omens, நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் – the gecko/lizard on the tall wall calls, மனை மா நொச்சி மீமிசை – in the huge nochi tree in the house yard, Water peacock’s foot tree, Vitex leucoxylon, மாச் சினை – huge branch, வினை மாண் – esteemed in its work (singing work), இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் – black cuckoo sings what it has learned, Indian koel, உரம் புரி உள்ளமொடு – with a strong mind, சுரம் பல நீந்தி செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் – even though he passed many wasteland paths to earn money, பொய்யலர் – he is not a liar, வருவர் – he will come back, வாழி தோழி – may you live long my friend, புறவின் பொன் வீக் கொன்றையொடு – with the  forest’s golden kondrai flowers, சரக்கொன்றை, கடுக்கை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula, அடு பிடவுத் தளை அவிழ – nearby pidavam petals open, காட்டு மல்லிகை, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, இன்னிசை வானம் இரங்கும் – sweet music roars from the skies, அவர் வருதும் என்ற பருவமோ இதுவே – this is the season that the said he would return

நற்றிணை 333, கள்ளிக்குடிப் பூதம் புல்லனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

Natrinai 333, Kallikudi Pootham Pullanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
With his heart filled with charity,
to earn precious wealth,
without thinking about the
harshness, your lover went on the
wasteland path which ruins strength,
where a tiger fights with an elephant
with flower designs on his forehead
and then drinks water from a tiny
spring near the pebble-filled path,
clouds have risen up to the vast sky
not doing their raining duties, and
bamboos have dried and lost their beauty.

May your sorrow end!   It appears that
he will come and embrace bamboo-like
arms adorned with ornaments.

The lizard on the bright walls of our tall,
fine house of great fame, calls sweetly in the
middle of the night, whenever we think of him.

Meanings:  மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென – since the clouds left their job and reached the dark/wide skies, கழை கவின் அழிந்த – bamboos have lost their beauty, கல் அதர் – wasteland path with stones, சிறு நெறி – small path, பரல் – pebbles, அவல் – holes, pits, ஊறல் – where water oozes, springs, சிறு நீர் – small springs, மருங்கின் – nearby, பூ நுதல் யானையொடு புலி பொருது – tiger fights with the elephant with flower designs on his forehead, உண்ணும் – drinks, சுரன் இறந்து – passed the wasteland, அரிய என்னார் – not thinking that it is difficult, உரன் அழிந்து – ruining strength, உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – with a full heart desirous of being charitable, அரும் பொருட்கு அகன்ற காதலர் – lover who went for precious wealth, முயக்கு எதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் – it appears that he will come and embrace your bamboo-like arms with perfect jewels, நீங்குக மாதோ நின் அவலம் – may your sorrow end, ஓங்கு மிசை – on a tall place, உயர் புகழ் – high fame, நல் இல் – fine house, ஒண் சுவர்ப் பொருந்தி – on the bright walls, நயவரு குரல பல்லி – lizard/gecko with sweet sounds, நள்ளென் யாமத்து – in the pitch darkness of night, உள்ளுதொறும் படுமே – calls whenever I think

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2525, தலைவி சொன்னது
மெல்லியல் ஆக்கைக் கிருமி, குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவி ஆது கற்றேன் பல்லியின்
சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு பண்டு பண்டே.