நான் மட்டுமே உறங்கவில்லை
குறுந்தொகை 6, பதுமனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
Kurunthokai 6, Pathumār, Neythal Thinai – What the heroine said to her friend
In the still darkness of night,
words have died down,
everybody has sunk
into sweet sleep with no malice,
and the whole wide world sleeps.
I certainly am the only one
who is unable to sleep!
Meanings: நள்ளென்றன்றே யாமம் – the night was with pitch darkness, சொல் அவிந்து – words have died down, இனிது அடங்கினரே – they have slept sweetly, மாக்கள் – humans, people, முனிவின்று – without stress, without malice, நனந்தலை – wide spaced, உலகமும் துஞ்சும் – world sleeps, ஓர் யான் – I alone, மன்ற – certainly, துஞ்சாதேனே – I am not able to sleep
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1689
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்பில்,
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணை காணேன்,
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்று அறியேனே.