தலைவன் தேரோட்டியிடம் சொன்னது
தலைவன் தேரோட்டியிடம் சொன்னது – (52 பாடல்கள் ) அகநானூறு 9 (இது பாலை), 34, 44, 54, 64, 94,114, 124, 134, 144, 154, 204, 224, 234, 244, 254, 274, 284, 334, 344, 374 (இவை யாவும் முல்லை), நற்றிணை 21, 42, 59, 81 (இவை யாவும் முல்லை), 106 (இது நெய்தல்), 121, 142, 161, 221, 242, 321, 371 (இவை யாவும் முல்லை), குறுந்தொகை 189, 233, 237, 250, 323, 400, ஐங்குறுநூறு 291 (இது குறிஞ்சி), 422, 425, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490 (இவை யாவும் முல்லை)
குறுந்தொகை 250, நாமலார் மகனார் இளங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
பரல் அவல் படு நீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவைக் கால் இயல்
கடு மாக் கடவுமதி பாக நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.
Kurunthokai 250, Nāmalār Makanār Ilankannanār, Pālai Thini – What the hero said to his charioteer
Urge your swift steeds and ride fast,
O charioteer! Go like the wind!
Let’s go before evening, when fine
stags drink the stagnant water from
ditches with pebbles, and romp
around with their mates on our path,
so that we can remove the sorrow
of the woman of chosen, sweet words,
whose kohl-lined eyes are like warring
carp fish that are in deep waters.
Notes: The hero who was returning after a successful trip said this to his charioteer, goaded by his desire to see the heroine soon. வினை முற்றி மீண்டுவரும் தலைவன் தலைவியை விரைந்து காணும் அவாவினால் பாகனுக்குக் கூறியது. உண்கண் (5) – இரா. இராகவையங்கார் உரை – மையிட்ட கண்கள், என் நெஞ்சத்தை உண்ட கண்கள் என்பதுமாம். மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). தெருமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).
Meanings: பரல் அவல் படுநீர் – stagnant water in ditches with small pebbles, மாந்தி – drinking, துணையோடு இரலை – a stag with his female, நன் மான் – fine deer, நெறி முதல் உகளும் – they romp around on the path, மாலை வாரா அளவை – before evening time, கால் இயல் – fast like the wind, கடு மாக் கடவுமதி பாக – ride rapidly your fast horse O charioteer (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), நெடு நீர் – deep water, பொரு கயல் – fighting carp fish, cyprinus fimbriatus, முரணிய – differing, hostile, உண்கண் – kohl rimmed eyes, தெரி தீம் கிளவி – a woman of chosen sweet words (அன்மொழித்தொகை), தெருமரல் உய – to escape from sorrow (உய – உய்ய என்பதன் இடைக்குறை), ஏ – அசைநிலை, an expletive
குறுந்தொகை 400, பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
சேயாறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களை கலம் காமம் பெருந்தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே.
Kurunthokai 400, Pēyanār, Mullai Thinai – What the hero said to his charioteer
O wise charioteer!
Desiring what is good, you thought
in your mind if we took the long
route, I will not be able to remove
the love distress of my wife with
wide arms, and so you blazed new
paths, breaking the raised grounds
with pebbles.
You have saved the life of the woman
who has suffered. Is it just a
chariot ride that you gave me today?
Notes: வினை முற்றி வந்த தலைவன் தேர்ப்பாகனைப் பாராட்டியது.
Meanings: சேயாறு செல்வாம் ஆயின் – if we took the long route, இடர் இன்று – without sorrow, களைகலம் காமம் – I will be unable to remove her love affliction, பெருந்தோட்கு – of the woman with wide shoulders, of the woman with wide arms (அன்மொழித்தொகை), என்று – thus, நன்று புரிந்து – desiring goodness, எண்ணிய மனத்தை ஆகி – you of thinking mind, முரம்பு கண் உடைய ஏகி – breaking the raised grounds with pebbles and going, கரம்பைப் புது வழிப்படுத்த – created new paths in the dry land, மதியுடை வலவோய் – O charioteer with wisdom, இன்று தந்தனை – you gave today, தேரோ – just the chariot ride, நோய் உழந்து உறைவியை – my wife who is struggling with the painful (separation) disease, நல்கலான் – due to your giving, ஏ – அசைநிலை, an expletive
நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே.
Natrinai 242, Vilikatpēthai Perunkannanār, Mullai Thinai – What the hero said to the charioteer
Leafless pidavam plants
have put out buds to blossom,
delicate thalavam vines
spread on bushes have bloomed,
golden kondrai flowers
have opened, and clusters of
sapphire-like kāyā flowers
flourish on small branches.
This is the rainy season.
Ride fast oh charioteer!
Behold! In the saline land,
a doe slips away from the crowd
with her fawn with peering eyes.
With love in his heart, her
strong stag runs in search of her.
Notes: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.
Meanings: இலை இல – with no leaves (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), பிடவம் – pidavam plants, Randia malabarica, காட்டு மல்லிகை, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, ஈர் மலர் அரும்ப – cool buds have blossomed into flowers, beautiful buds have blossomed into flowers, புதல் இவர் – spread on bushes, தளவம் – golden jasmine, பூங்கொடி – flowering vines, அவிழ – opening, பொன் என – like gold, கொன்றை மலர் – kondrai flowers, laburnum, Golden Shower Tree, Cassia fistula, மணி என – sapphire gem like, பல் மலர் காயா – clusters of kāyā flowers, ironwood tree, Memecylon edule, குறு சினை – small branches, கஞல – dense, flourish, கார் தொடங்கின்றே காலை – when rainy season has begun (ஏ – அசைநிலை, an expletive), வல் விரைந்து – very fast, செல்க பாக – go oh charioteer, நின் தேரே – your chariot (ஏ – அசைநிலை, an expletive), உவக்காண் – look there, கழி – backwaters, பெயர் – moved away, களரில் – in the saline land, போகிய – went, மட மான் – female deer, delicate deer, விழிக்கட் பேதையொடு – with its fawn with confused eyes, with its fawn with peering eyes, இனன் – herd, group (இனம் என்பதன் போலி), இரிந்து ஓட – run away from, காமர் நெஞ்சமொடு – with a loving heart, அகலா – without running away, தேடூஉ நின்ற – was searching (தேடூஉ – இன்னிசை அளபெடை), இரலை – a kind of deer, ஏறே – a male deer (ஏ – அசைநிலை, an expletive)
நற்றிணை 321, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவன் பாகனிடம் சொன்னது
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப் பெயர
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும் கொல்லோ திருந்து இழை அரிவை
வல்லைக் கடவுமதி தேரே சென்றிக
குருந்து அவிழ் குறும் பொறை பயிற்ற
பெருங்கலி மூதூர் மரம் தோன்றும்மே.
Natrinai 321, Mathurai Alakkar Gnālār Makanār Mallanār, Mullai Thinai – What the hero said to the charioteer
From the forest with red soil,
herders with short-haired goats
with clear, sweet bells return home.
Forest jasmine flowers that
Brahmin women on the mountain
slopes wear have blossomed.
In the evening time when the
sun’s rays reach the mountains,
my wife wearing perfect jewels will
feel sad when she sees our dull and
desolate house.
Ride fast, oh charioteer!
The trees in our noisy, ancient town
will appear between the small
boulders where kuruntham flowers bloom.
Notes: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.
Meanings: செந்நிலப் புறவின் – from the forest with red soil, புன் மயிர்ப் புருவை – goats with short hair, goats with soft hair, goats with parched hair, பாடு இன் தெள் மணி – clear sweet sounding bells, தோடு தலைப்பெயர – herds return, herds move, கான முல்லை – forest jasmine, கயவாய் அலரி – wide opened flowers, பார்ப்பன மகளிர் – Brahmin women, சாரல் புறத்து – on the mountain slopes, அணிய – near, கல் சுடர் சேரும் – sun reaches the mountains, கதிர் மாய் மாலை – evening when the sun’s rays hide, புல்லென் வறுமனை நோக்கி – looking at the dull empty house, மெல்ல வருந்தும் கொல்லோ – she feel sad gently (கொல் – அசைநிலை, an expletive ஓ – அசைநிலை, an expletive), திருந்திழை அரிவை – the young lady with perfect jewels, வல்லைக் கடவுமதி தேரே – ride the chariot fast (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), சென்றிக – please go, you proceed (செல்க என்னும் வியங்கோள் வினைதிரிசொல்), குருந்து அவிழ் – kuruntham flowers open, wild orange, citrus indica, குறும் பொறை – small hills, small boulders, பயிற்ற – getting close, பெருங்கலி – great uproar, மூதூர் – ancient town, மரம் தோன்றும்மே – the trees will appear (தோன்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)
நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2527
தலைவன் தேரோட்டியிடம் சொன்னது
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று, தேன் நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே!