தூது – குருகு
நற்றிணை 54, சேந்தங் கண்ணனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வாப் பறை விரும்பினை ஆயினும் தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை 5
அது நீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும் 10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே.
Natrinai 54, Chēnthankannanār, Neythal Thinai – What the heroine said to a heron
Oh white heron with pure feathers
and black legs! You love to dive into
the ocean with your flock and eat
abundant fish!
But please listen to me! This evening
time brings me great sorrow!
If you understand the reason for
my pain, and since you are very kind
to me, please let him know clearly of
my distress without treating me as being
of differing mind,
the man from the shores with kandal tree
fences, where sapphire-hued sides of clear
waves lap gently against young gnāzhal
trees with tender leaves that are ready to
be plucked by those who wear leaf garments.
Notes: இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுப் பட்டு வாராது ஒழியக்கண்ட தலைவி, வரைதல் வேட்கையளாய், குருகிடம் இரந்து கூறியது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஞாழலின் கரிய புறத்தினைத் தெண் திரை தடவும் என்றது, ‘தலைவன் தன்னைத் தழுவி முதுகைத் தடவுதல் வேண்டும்’ என்ற தலைவியின் வேட்கையை உணர்த்தியது. Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee. Poem 83 is an address to an owl by the heroine’s friend. மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).
Meanings: வளை நீர் – water surrounding the earth, the oceans (அன்மொழித்தொகை), மேய்ந்து – eating, கிளைமுதல் – with your flock, செலீஇ – going (சொல்லிசை அளபெடை), வாப் பறை – leaping and flying, விரும்பினை ஆயினும் – even though you desire, தூச் சிறை – pure feathers, இரும் புலா அருந்தும் – eating large amounts of flesh, நின் கிளையொடு சிறிது இருந்து – staying a little bit with your relatives, கருங்கால் வெண்குருகு – oh white heron/egret with black legs, எனவ கேண்மதி – listen to my words (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல், மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), பெரும் புலம்பின்றே – brings great pain, brings great loneliness, சிறு புன் மாலை – painful early evening, அது நீ அறியின் – if you know that, அன்பும் ஆர் உடையை – since you are very kind to me (ஆர் – அசைச் சொல், an expletive), நொதுமல் நெஞ்சம் கொள்ளாது – not considering me as a stranger, not considering me of having a differing mind, என் குறை இற்றாங்கு – that this is the nature of my sorrow, உணர – to understand, உரைமதி – please tell him (மதி – முன்னிலை அசை, an expletive used with the second person), தழையோர் – those who wear leaf garments, கொய் குழை அரும்பிய – sprouted tender leaves that are ready to be plucked, குமரி ஞாழல் – young gnāzhal trees, young cassia trees, புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera, தெண் திரை – clear waves, மணிப் புறம் – sides with gem color, sides with dark blue color, தைவரும் – they touch, they hit against, கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – to the lord of the shores with kandal tree fences (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon, ஏ – அசைநிலை, an expletive)
நற்றிணை 70, வெள்ளி வீதியார், மருதத் திணை – தலைவி சொன்னது
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே.
Natrinai 70, Velliveethiyār, Marutham Thinai – What the heroine said to a heron
Oh small white heron! Oh small
white heron with bright, white
feathers like shore-washed clothes!
Come to our town, search
our shores for pregnant keliru fish,
and eat them until you are sated.
After that, go to his fine town with
fields and a river with sweet water
that flows and spreads in our town,
and tell my beloved man that I am
afflicted with love, and that my jewels
are slipping down.
Will you be kind enough to do this
for me? Or, will you be very forgetful,
you who have not told him?
Notes: தலைவி வரைதல் வேட்கை கொண்டு குருகிடம் உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூட்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறு கிளவி என்பர் நச்சினார்க்கினியர். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் கழனி என்றது அவர் ஊரிலுள்ள இனிய புனலே இங்கு வருவதால் அங்கும் இரையை பெறுதற்கு இயலும் என்றும் கழனியின் புனல் ஈண்டு வருவதால் ஊரும் அணித்தேயாம் ஆதலின் வருந்தாதேகுதற்கு இயலும் என்றுங் கூறியதாம். அனைய அன்பினையோ என்றது எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையயோ என்றதாம். ஒளவை துரைசாமி உரை – அவர் ஊர் ஆங்கட் கழனி ஆதாரமானாற்போல, ஈங்கு உறையும் யான் உயிர் தாங்கி வாழ்வதற்கு ஆங்கு அவர் வரவு ஆதாரம் என்றாளாயிற்று. Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee. Poem 83 is an address to an owl by the heroine’s friend.
Meanings: சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, துறை போகு – taken to the water shores, அறுவை – clothing, garments, தூ மடி – washed clothing, pure garments, அன்ன – like, நிறம் – color, கிளர் – bright, தூவி – feathers, wings, சிறு வெள்ளாங்குருகே – oh small white heron/egret, எம் ஊர் வந்து – you came to our town, எம் – our, உண் துறை – drinking water shores, drinking water port, துழைஇ – searching (சொல்லிசை அளபெடை), சினைக் கெளிற்று – pregnant keliru fish, Marones cavasius, ஆர்கையை – you eating to the full, அவர் ஊர்ப் பெயர்தி – you go to his town, அனைய அன்பினையோ – will you be kind for that, பெருமறவியையோ – will you be very forgetful, ஆங்கண் – there, தீம் புனல் – sweet flowing water, ஈங்கண் – here, பரக்கும் – spreading, கழனி நல் ஊர் – fine town with fields, மகிழ்நர்க்கு – to my lover, என் – my, இழை நெகிழ் – loose jewels are slipping down (bangles are slipping off my arms), பருவரல் – sadness, செப்பாதோயே – you who have not told him (ஏ – அசைநிலை, an expletive)
நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 2936, தலைவி சொன்னது
நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே,
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே.
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங்கொண்டு அருளாயே.
நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3535, தலைவி சொன்னது
பாசறவு எய்தி எனை ஊழி நைவேன்?
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3855, தலைவி சொன்னது
பூந்துழாய் முடியார்க்குப் பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளங் குருகே! திருமூழிக்களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண்ணீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே!