தூது – கிளி 

நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சித் திணை  – தலைவி கிளியிடம் சொன்னது
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

Natrinai 102, Chempiyanār, Kurinji Thinai – What the heroine said to a parrot
Oh red-beaked, green parrot
who eats clusters of millet on bent
stalks!  Without fearing,
eat as much as you want, and when
you are satisfied, take care of my desire.
I beg your favor with joined palms!

If you go to see your relatives in his
country with jackfruit trees with many
clusters of fruits, see the lord of the
mountains and tell him that the innocent
daughter of the forest dweller from this
mountain is protecting her millet field!

Notes:  இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுபட்டு வராததால், தலைவி வரைதல் விரும்பி கிளியிடம் இரந்து கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பா உரையில் ‘அன்ன பிற’ என்றதனால் ‘இன்னும் கூற்றாக இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க’ என்று கூறி, இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கண் உள்ள பலா மரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃது என்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது அறிக.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  Poem 83 is an address to an owl by the heroine’s friend.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:  கொடுங்குரல் – curved clusters (millet), குறைத்த – reduced (by eating), செவ்வாய்ப் பைங்கிளி – oh red-beaked green parrot, அஞ்சல் ஓம்பி – remove your fear, ஆர்பதம் கொண்டு – take food, நின் குறை முடித்த பின்றை – once your need is satisfied, என் குறை – my need, செய்தல் வேண்டுமால் – you need to take care (வேண்டுமால் – ஆல் அசைநிலை, an expletive), கை தொழுது இரப்பல் – I plead to you with my joined palms, பல் கோள் பலவின் – with jackfruit trees with many fruit clusters, Artocarpus heterophyllus (கோள் = குலை), சாரல் – mountain slopes, அவர் நாட்டு – in his country, நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – if you reach your relatives, அம் மலை கிழவோற்கு – to the lord of that mountains, உரைமதி – please tell him (மதி – முன்னிலையசை, an expletive of the second person), இம் மலை – this mountain, கானக் குறவர் மட மகள் – the innocent daughter of the mountain dweller in the forest, ஏனல் காவல் ஆயினள் எனவே – she is in the millet field to protect it (ஏ – அசை நிலை, an expletive)

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 2939, தலைவி சொன்னது
என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீ அலையே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1946, தலைவி சொன்னது
சொல்லாய் பைங்கிளியே,
சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள் வடவேங்கடவன் வர,
சொல்லாய் பைங்கிளியே!

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3529, தலைவி சொன்னது
மை அமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கையிருந்து,
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ,
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே!

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3532, தலைவி சொன்னது
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்,
வெங்கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த,
செங்கண் கருமுகிலைச் செய்ய வாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!