தும்பியிடம் சொன்னது

குறுந்தொகை 392, தும்பிசேர் கீரனார், குறிஞ்சித் திணை  – தோழி தும்பியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
அம்ம வாழியோ அணிச் சிறைத் தும்பி!
நன் மொழிக்கு அச்சமில்லை அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்
கடமை மிடைந்த துடவை அம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரை செலல் துண் தோல் போலப்
பிரசந் தூங்கு மலை கிழவோர்க்கே.

Kurunthokai 392, Thumpisēr Keeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the dragonfly, as the hero listened nearby
O dragonfly with beautiful wings!
There is no need to fear
utterance of good words.

If you reach her lover’s country
with lofty mountains,
where bee hives hang in a row
like the fine shields of kings,
tell him that she cannot escape
from her relatives who raise fine
dust with hoes, weeding amidst
pretty, tiny millet plants
in the fields, thronged by elks.

Meanings:   அம்ம – an asai, an expletive, வாழியோ – may you live long, அணி – beautiful, சிறை – winged, தும்பி – dragonfly, நன்மொழிக்கு அச்சமில்லை – there’s no fear in telling good words, அவர் நாட்டு – his country, அண்ணல் – lofty, நெடு வரை – tall mountains, சேறி ஆயின் – if you reach, கடமை மிடைந்த – kadamai deers (elk) filled, துடவை – fields, அம் – beautiful, சிறு தினை – small millet, Italian millet, Setaria italicum, துளர் – hoe, எறி – hitting, நுண் துகள் – fine dust, களைஞர் – those who weed the fields, தங்கை – sister, தமரின் – relatives, தீராள் – has not left them, என்மோ – tell this, அரசர் – kings, நிரை செலல் – arranged in a row, துண் தோல் போல – like the fine shields, பிரசந் தூங்கு – honeycombs hanging, மலை கிழவோர்க்கே – to the lord of the mountains

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1678, தலைவி சொன்னது
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ!

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1679, தலைவி சொன்னது
வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத்து எம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!