திருமாலிடம் தொண்டன் கூறியது

பரிபாடல் 1, திருமால் பாடல்
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே
அன்ன மரபின் அனையோய் நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?

திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டவம், திவ்யபிரபந்தம் 2061
பொன் ஆனாய் பொழிலேழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய்! என்னானாய்! என்னின் அல்லால்
என் அறிவேன் ஏழையேன்!