தலைவனைக் கள்வன் என்று அழைத்தல்

குறுந்தொகை 25, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே.

Kurunthokai 25, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Nobody was there, just him,
the thief.  If he does not keep
his promise, what can I do?

A heron with thin green legs, like
millet stalks, was looking for eels in
the running water when he took me.

Notes:  தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல்பற்றி தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.  அகநானூறு 246 – கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக.  களவன் – சாட்சியாக இருந்தவன்.  குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) – இரா. இராகவையங்கார் உரை – குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள்.  உ. வே. சாமிநாதையர் உரை – அவன் மணந்த நிகழ்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்ளும் தலைவி தாம் என்று பன்மையாற் கூறி கள்வனாதலைக் கூறுகையில் உண்டான செறல்பற்றி தான் என்று ஒருமையாற் கூறியதாகக் கொள்க.

Meanings:  யாரும் இல்லை – nobody was there (யாரும் – உம்மை முற்றுப்பொருள்), தானே கள்வன் – he who was the thief was the one there, he was the only one who was there (ஏ – பிரிநிலை, exclusion), அது பொய்ப்பின் – if he does not keep up his promise, யான் எவன் செய்கு – what can I do, (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசை நிலை, an expletive, தினைத் தாள் அன்ன- like millet stalks, Italian millet, Setaria italicum, சிறு பசுங்கால – with thin legs, with tender legs, with green legs, ஒழுகு நீர் – running water, stream, ஆரல் பார்க்கும் – looking for eels, விலாங்கு மீன், Brown or green sand eel, Rhynchobdella aculeate, குருகும் உண்டு – heron/egret/stork was there (உம்மை இழிவு சிறப்பு), தான் மணந்த – when he took me, when he united with me, ஞான்று – on that day, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 318, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந்நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும் கடவனும் புணைவனும் தானே.

Kurunthokai 318, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My man is from the shore with shimmering
waters where attacking sharks abound, and
fragrant gnālal and punnai blossoms are
spread on the sand, resembling a veriyāttam
ritual ground.

I have wasted away thinking about him. On the
day when he hugged my delicate arms that are
like bamboo, he uttered perfect promises.

I do not know whether he considers me or not.
How can I tell him if he doesn’t already know?
That thief has an obligation to me.  He is my life
raft.

Notes:  தலைவி தோழிக்கு கூறுவாளாய், தலைவன் விரைவில் வரைய வேண்டும் என்னும் குறிப்பை உணர்த்தியது.  எறி சுறா (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லுகின்ற சுறா மீன்கள், உ. வே. சாமிநாதையர் உரை – அடைந்தாரை எறிகின்ற சுறா மீன்கள், வலைஞரால் எறியப்படுகின்ற என்பதும் பொருந்தும், இரா. இராகவையங்கார் உரை – சுறா எறியும் என்பது ‘வயச்சுறா எறிந்த புண் (குறுந்தொகை 269) என்பதனால் உணர்க.  கள்வனும் கடவனும் புணைவனும் தானே (8) – தமிழண்ணல் உரை – கள்வன், கடவன், புணைவன் முறையே குற்றவாளி, விசாரிப்பவன் (நீதிபதி) அல்லது வழக்குத் தொடுப்பவன், சான்று (புணை) கூறுபவன் மூவரும் ஒருவனேயாதலால், அவன் வழங்கினால் அன்றி, நீதி கிடைக்காது என்பது குறிப்பு.

Meanings:  எறி சுறா – murderous sharks, attacking sharks, sharks that are attacked, கலித்த – in abundance, இலங்கு நீர்ப் பரப்பின் – in the land near the bright ocean, நறு வீ ஞாழலொடு – along with the fragrant flowers of the gnālal trees, புலிநகக் கொன்றை, tigerclaw tree – Cassia Sophera and, புன்னை – laurel trees, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தாஅய் – dropped, spread (இசைநிறை அளபெடை), வெறி அயர் களத்தினின் – like a  veriyāttam ground of Murukan (களத்தினின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்றும் – it appears, துறைவன் – lord of the seashore, குறியானாயினும் – whether he does not consider, குறிப்பினும் – whether he considers, பிறிதொன்று – a different matter (strangers will seek her hand, marriage which is different from secret love), அறியாற்கு உரைப்பலோ – can I tell him who does not know, யானே – me, எய்த்த – wasted, thinned, இ – these, பணை – bamboo-like, எழில் – beautiful, மென்தோள் – delicate arms, அணைஇய அ நாள் – on the day when he hugged me (அணைஇய – சொல்லிசை அளபெடை), பிழையா வஞ்சினம் செய்த – made faultless promises (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), கள்வனும் – that thief, கடவனும் – the one who has an obligation, புணைவனுந் தானே – he is a raft to me, he is the one who is of support to me

நற்றிணை 28, முதுகூற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே.

Natrinai 28, Muthukootranār, Pālai Thinai – What the heroine’s friend said to the heroine
He used to take my hands
and press them to his eyes,
take his hands and stroke my
fine forehead,
and spoke sweetly like a mother.

He is cruel like a thief, the lord
of the lofty mountains with peaks,
where waterfalls flows down
like streams of sapphires,
golden vēngai flowers blanket
the soaring mountain ranges,
and tall bamboos with green
nodes tear into the swiftly
moving clouds on high summits!

Notes:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.  குறை நயப்புமாம்.  ஔவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் வரும், ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒன்றித் தோன்றுந்தோழி மேன (தொல். அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  ஔவை துரைசாமி உரை – பிரிவுத் துன்பத்திற்கு இரையாகி உளம் மெலிந்து வன்மை குன்றியிருந்த தலைவிக்குப் பொறாமையும் மனவன்மையும் தோற்றுவித்ததற்குத் தோழி தலைவனைக் கொடுமைக் கூறிப் பழித்த சூழ்ச்சித் திறம்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கள்வர் போலக் கொடியவர் என்றது சிறுமை பற்றி வந்த நகை உவமம்.  அன்னை போல என்றது சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பண்பு உவமம்.

Meanings:  என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் – he takes my hand and presses them to his eyes, தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும் – takes his own hands and strokes my fine forehead, அன்னை போல இனிய கூறியும் – speaks sweet words like a mother, கள்வர் போலக் கொடியன் – he is a cruel man like a thief, மாதோ – மாது + ஓ – அசை நிலைகள், expletives, மணி என இழிதரும் அருவி – sapphire colored waterfalls that flow down, பொன் என வேங்கை தாய – gold-like vēngai flowers spread, Pterocarpus marsupium, Kino tree, ஓங்கு மலை அடுக்கத்து – on the tall mountain range, ஆடு – swaying, கழை – bamboo, நிவந்த – tall, பைங்கண் – green bamboo nodes, fresh nodes, மூங்கில் – bamboo, ஓடு மழை – passing clouds, running clouds, கிழிக்கும் – they tear, சென்னி – summits, கோடு – mountain peaks, உயர் – tall, பிறங்கல் மலை கிழவோனே – lord of the bright mountains (ஏ – அசை நிலை, an expletive)

கலித்தொகை 51, தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் தொடீஇ!  கேளாய்!  தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு, அன்னை
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
“அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா
அன்னை அலறிப் படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.

Listen my friend donning bright bangles!
That wild brat who used to kick our little sand
houses on the street with his leg, pull flower
strands from our hair, and yank striped balls
from us causing agony, came one day when
mother and I were at home.
“O, people of this house!  Please give me some
water to drink,” he said.  Mother said to me,
“Pour water in the thick gold vessel, and give it
to him to drink, my daughter with bright jewels.”
And so I went unaware that it was him.
He seized my bangled wrist and squeezed it,
causing distress.  “Mother, see what he has done,”
I shouted.
My distressed mother came running with a shriek
and I said to her “He had hiccups drinking water.”
Mother stroked his back gently, and asked him to
drink slowly.
He looked at me through the corners of his eyes
and gave me killer looks.  He then smiled in friendship,
that thief!

Notes:  நற்றிணை 378 – ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை சிதைஇ.  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  சிதையா – சிதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

Meanings:  சுடர் தொடீஇ – O bright bangled woman (அன்மொழித்தொகை, விளி, an address), கேளாய் – listen to this, தெருவில் நாம் ஆடும் – when we played on the street, மணல் சிற்றில் – little sand houses, காலின் சிதையா – he kicked with his feet and broke (சிதையா – வினையெச்சம், verbal participle), அடைச்சிய கோதை – worn flower strands, பரிந்து – broke, ruined, வரிப் பந்து கொண்டு ஓடி – took away our striped ball and ran away, நோதக்க செய்யும் – causing pain, சிறு பட்டி – the irresponsible boy, the little brat, மேல் ஓர் நாள் – a day a while ago, அன்னையும் யானும் இருந்தேமா – when mother and I were together, இல்லிரே – O those in this house, உண்ணு நீர் வேட்டேன் – I am requesting drinking water, என வந்தாற்கு – to him who came in this manner, அன்னை – mother, அடர் பொன் சிரகத்தால் வாக்கி – pour for him in the thick gold bowl, pour for him in a thick iron bowl, சுடர் இழாய் – O one wearing bright jewels, உண்ணு நீர் ஊட்டி வா – give him water to drink, என்றாள் – she said, என யானும் – and so I, தன்னை அறியாது சென்றேன் – I went unaware that it was him, மற்று – then, என்னை வளை முன்கை பற்றி – he grabbed my bangled forearm, நலிய – becoming distressed, தெருமந்திட்டு – I became confused, அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் – mother! see what he has done, அன்னை அலறி படர்தர – as mother screamed and came, தன்னை யான் – I said about him, உண்ணு நீர் விக்கினான் – he hiccupped while drinking, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ – as mother stroked his back gently, மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி – he then looked at me through the corner of eyes giving killer looks, நகை கூட்டம் செய்தான் – he smiled in friendship, he smiled with love, அக் கள்வன் மகன் – that thief

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1208
கள்வன் கொல்? யானறியேன்! கரியானொரு காளை வந்து,
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போத என்று,
வெள்ளி வளைக் கைப்பற்றப் பெற்ற தாயரை விட்ட கன்று,
அள்ளலம் பூங்கழனி அணியாலி புகுவர்க் கொலோ?

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1558
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை உள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர் சோர்தருமால்,
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்,
நள்ளேன் உன்னையல்லால் நறையூர் நின்ற நம்பீயோ.

திருமங்கை ஆழ்வார், திருநெடுந் தாண்டவம், திவ்ய பிரபந்தம் 2074
உள் ஊரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
ஒளி வளையும் மாநிறமும் கொண்டார் இங்கே,
தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 2943
வள ஏழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன்
‘களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
‘தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய் வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே.