தலைவன் கொடியவன்

குறுந்தொகை 252, கிடங்கில் குலபதி நக்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியனாகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலையின் இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு,  5
துனியல் வாழி தோழி, சான்றோர்
புகழும் முன்னர் நாணுப,
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.

Kurunthokai 252, Kidangil Kulapathi Nakkannanār, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Do not be upset!  You ask me
why I am a very naive woman
with the virtue of a goddess,
hospitable to the cruel man
from the mountain country
whenever he comes, without
turning away my sweet face.

The wise will feel ashamed
in front of praise.  How can he
tolerate if I blame him for what
he has done?

Notes:  குறிஞ்சியுள் மருதம்.  Marutham in Kurinji.  The heroine said this to her friend who questioned her for accepting the hero who returned from his concubine’s house.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள, ‘இங்ஙனம் ஏற்றுக் கொள்ளல் அறிவோ?’ என்று வினவிய தோழியிடம் தலைவி கூறியது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வாழி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.  சான்றோர் புகழும் முன்னர் நாணுப (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கண் முன்னர்ப் பிறர் தம்மைப் புகழும் புகழையும் நல்லோர் நாணுப என்றவாறு, உ. வே. சாமிநாதையர் உரை – சான்றோர் இயல்பு இதுவென உலகின் மேல் வைத்துக் கூறினும் தலைவி கருதியது தலைவனையே என்க.

Meanings:  நெடிய திரண்ட தோள் – long rounded arms, long thick arms, வளை ஞெகிழ்த்த – caused the bangles to slip down (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கொடியனாகிய குன்று கெழு நாடன் – the cruel man from the country with mountains, வருவதோர் காலையின் – when he comes, இன் முகம் – sweet face,  திரியாது – not differing, கடவுள் கற்பின் – with virtue like that of a goddess (கற்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அவன் எதிர் பேணி – welcoming him with hospitality, மடவை மன்ற நீ – you are a naive woman for sure (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), என – thus, கடவுபு – asking, துனியல் –  do not be angry, do not be sad, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, சான்றோர் – the wise people, புகழும் முன்னர் நாணுப – they will be ashamed in front of praise, they will feel embarrassed, பழி – blame, யாங்கு ஒல்ப – how will he tolerate, ஓ – அசைநிலை, an expletive, காணுங்கால் – when he faces it, if analyzed, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 278, பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும் உள்ளார்,
கொடியர் வாழி தோழி, கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து  5
ஏற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

Kurunthokai 278, Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
He does not think about my new
little doll with delicate, small feet
that look like the lovely, tender
leaves of sprouted mango trees
that shake in strong winds, nor
does he think about me.

He is cruel, the man who crossed
the mountains,
where a male monkey shakes off
ripe sweet fruits from a tree, and
a female monkey stands below with
her young and catches them again
and again and eats.

Notes:  The heroine said this to her friend who asked her to bear her sorrow when the hero was away.  தலைவன் பிரிந்த வேளையில், நீ ஆற்றுதல் வேண்டும் என்று கூறும் தோழியிடம் தலைவி கூறியது.  தமிழண்ணல் உரை – இதிலுள்ள குரங்கின் வாழ்க்கை ‘இறைச்சி’ எனப்படும்.  ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு தகுந்த காட்டாகும் பாட்டு இது.  பார்ப்பு – மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பாலான (தொல்காப்பியம், மரபியல் 14).  கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுப (தொல்காப்பியம், மரபியல் 13).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  உறு வளி உளரிய – strong wind shakes them, strong winds passes through them, அம் – beautiful,  தளிர் – sprouts, மாஅத்து – of mango trees (அத்து சாரியை), முறி கண்டன்ன – like seeing the tender leaves, மெல்லென் சீறடி – delicate small feet, சிறு பசும் பாவையும் – and the small fresh doll, and the small new doll, எம்மும் உள்ளார் – he does not think about me as well (எம் – தன்மைப் பன்மை, first person plural), கொடியர் – he is a cruel man, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்ப – as a male monkey shakes off ripe fruits, கீழிருந்து ஏற்பன ஏற்பன – receives it again and again from down, உண்ணும் – eats, பார்ப்புடை மந்திய – with a female monkey with young ones, மலை – mountains, இறந்தோர் – the man who went past, ஏ – அசைநிலை, an expletive

நற்றிணை 28, முதுகூற்றனார், பாலைத் திணை – தலைவிக்குத் தோழி சொன்னது
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ,
மணி என இழிதரும் அருவி பொன் என  5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிக்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே.

Natrinai 28, Muthukootranār, Pālai Thinai – What the heroine’s friend said to the heroine
He used to take my hands
and press them to his eyes,
take his hands and stroke my
fine forehead, and spoke
sweetly to me like a mother.

He is cruel like a thief,
the lord of the lofty mountains,
where sapphire colored
waterfalls flow down,
golden vēngai flowers blanket
the soaring mountain ranges,
and tall bamboos with green
nodes tear the swiftly moving
clouds on high summits!

Notes:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.  குறை நயப்புமாம்.  ஔவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் வரும், ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒன்றித் தோன்றுந்தோழி மேன (தொல். அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  ஔவை துரைசாமி உரை – பிரிவுத் துன்பத்திற்கு இரையாகி உளம் மெலிந்து வன்மை குன்றியிருந்த தலைவிக்குப் பொறாமையும் மனவன்மையும் தோற்றுவித்ததற்குத் தோழி தலைவனைக் கொடுமைக் கூறிப் பழித்த சூழ்ச்சித் திறம்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கள்வர் போலக் கொடியவர் என்றது சிறுமை பற்றி வந்த நகை உவமம்.  அன்னை போல என்றது சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பண்பு உவமம்.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல.

Meanings:  என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் – he takes my hand and presses them to his eyes, தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும் – takes his own hands and strokes my fine forehead, அன்னை போல இனிய கூறியும் – speaks sweet words like a mother, கள்வர் போலக் கொடியன் – he is a cruel man like a thief, மாதோ – மாது + ஓ – அசைநிலைகள், expletives, மணி என இழிதரும் அருவி – sapphire colored waterfalls that flow down, பொன் என வேங்கை தாய – gold-like vēngai flowers spread, Pterocarpus marsupium, Kino tree, ஓங்கு மலை அடுக்கத்து – on the tall mountain range, ஆடு – swaying, கழை – bamboo, நிவந்த – tall, பைங்கண் – green bamboo nodes, fresh nodes, மூங்கில் – bamboo, ஓடு மழை – passing clouds, running clouds, கிழிக்கும் – they tear, சென்னி – summits, கோடு – mountain peaks, உயர் – tall, பிறங்கல் மலை கிழவோனே – lord of the bright mountains (ஏ – அசைநிலை, an expletive)

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2513
துழா நெடுஞ் சூழ் இருள் என்று தன் தண் தாரது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ! இலங்கை
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே!