தலைவனிடம் சென்ற தலைவியின் நெஞ்சு 

நற்றிணை 56, பெருவழுதி, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் எனப்
போயின்று கொல்லோ நோய் தலை மணந்தே.

Natrinai 56, Peruvaluthi, Pālai Thinai – What the heroine said to her friend
Scents from tiny buds and fragrant
flowers of short-trunked kuravam
trees, raised by bees that swarm them,
mix with the fragrant breezes at this
time, giving great joy to the eyes.

But my sad heart went away to him,
the man who caused the bright bangles on
my arms to slip down.

Is my sad heart still with the uncaring, cruel
man, not caring about his actions, and desiring
to return only with him?  Or did it come back,
and on seeing my body that had lost its prior
beauty and had become the color of gold, said,
“She is now a stranger,” and left?

Notes:  வரைபொருள் ஈட்டத் தலைவன் சென்ற பொழுது, ஆற்றுப்படுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 1) என்ற நூற்பாவின்கண் இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று’ என்பர் இளம்பூரணர். இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் குறிக்கப்படும் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ என்றதற்கும், ‘நோயும் இன்பமும்’ என்பதன் உரையில் இப்பாட்டையே காட்டி, நெஞ்சினை உறுப்பும் உணர்வும் உடையது போல இளிவரல் பற்றிக் கூறுதற்கும் இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

Meanings:  குறு நிலைக் குரவின் – of short trunked kuravam trees, Bottle Flower Tree, Webera Corymbosa, சிறு நனை – small buds, நறு வீ – fragrant flowers, வண்டுதரு –  brought by bees, bringing bees, நாற்றம் வளி கலந்து – fragrance mixed with breezes, ஈய – yielding, கண் களி பெறூஉம் – eyes attain happiness (பெறூஉம் – இன்னிசை அளபெடை), கவின் பெறு காலை – at this beautiful time, எல் வளை – bright bangles, ஞெகிழ்த்தோர்க்கு – to the man who caused my bangles to slip down (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் – my heart which went with pain (உறீஇ – சொல்லிசை அளபெடை), செய் வினைக்கு அசாவா – uncaring about his actions, ஒருங்குவரல் – to come back together with him,  நசையொடு – with desire, வருந்தும் கொல்லோ – is it sad (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசை நிலை, an expletive), அருளான் ஆதலின் – since he is cruel, since he does not shower graces, அழிந்து – ruined, இவண் வந்து – returning here, தொல் நலன் இழந்த – original beauty lost, என் பொன் நிறம் நோக்கி – looking at my golden color (due to the pallor, பசலை), ஏதிலாட்டி இவள் எனப் போயின்று கொல்லோ – did it go away thinking ‘she is a stranger’ (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசை நிலை, an expletive), நோய் தலைமணந்தே – with increased disease (ஏ – அசை நிலை, an expletive)

நம்மாழ்வார், இயற்பா – திருவிருத்தம், கட்டளைக் கலித்துறை, பாடல் 3
திவ்ய பிரபந்தம் 2480, தலைவி சொன்னது
குழல் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டும் நிற்கும் கொல் மீளும் கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பன் போன தனி நெஞ்சமே!”

நம்மாழ்வார், இயற்பா – திருவிருத்தம், கட்டளைக் கலித்துறை, பாடல் 46
திவ்ய பிரபந்தம் 2523, தலைவி சொன்னது
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர் கருமம் கருதி,
விடநெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விடப் போய்த்
திடநெஞ்சமாய் எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.

திருமங்கை ஆழ்வார், சிறிய திருமடல், 115-122
வாராய் மடநெஞ்சே! வந்து – மணி வண்ணன்
சீரார் திருத்துழாய் மாலை நமக்குஅருளி
தாரான் தருமென்றிரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே, சொன்னக்கால்
ஆராயும் மேலும், பணிகேட்டு அதுஅன்றெனிலும்;
போராது ஒழியாது போந்திடு நீ என்றேற்குக்
காரார் கடல்வண்ணன் பின்போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது…..