சேரி

சேரி – மக்கள் சேர்ந்து வாழும் இடம், a place where people live together, தெரு, street, குடி, community, settlement, neighborhood, சிற்றூர், village – அகநானூறு 15-7. 65-4, 76-2, 110-2, 115-4, 140-8, 146-6, 200-2, 216-16, 220-1, 276-7, 347-6, 383-2, 390-9, Nat 63-3, 77-8, 145-9, 150-7, 171-4, 175-7, 249-9, 331-12, 342-4, 380-5, குறுந்தொகை 231-1, 231-2, 258-1, 262-1, 298-1, 320-7, 351-6, ஐங்குறுநூறு – 279-5, கலித்தொகை 44-12, 91-12, 117-6, பரிபாடல் 6-38, 7-32, புறநானூறு 348-4, பட்டினப்பாலை 76, மதுரைக்காஞ்சி 136, 329, 594, 615, 619

குறுந்தொகை 231, பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓரூர் வாழினும் சேரி வாரார்,
சேரி வரினும் ஆர முயங்கார்,
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே, நாண் அட்டு
நல் அறிவு இழந்த விழுந்த காமம்,  5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

Kurunthokai 231, Pālai Pādiya Perunkadunkō, Marutham Thinai – What the heroine said to her friend
He lives in the same town,
but does not come to our street.
Even if he comes to our street,
he does not embrace me with love.

Even when he sees me, he passes
by, as though he has seen a
cremation ground of strangers.

Love that has killed shame and
ruined reason has gone far away,
like an arrow shot from a bow.

Notes:  The heroine refused to listen to her friend who came as the hero’s messenger.  தலைவனின் தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.  சேரி (1,2) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.  ஆர (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்றாக, மன நிறைவு உண்டாகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெஞ்சு பொருந்த, வேட்கைத் தீர.  காணா (4) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  ஓரூர் வாழினும் – even though he lives in the same town, சேரி வாரார் – he does not come to our street, சேரி வரினும் – even when he comes to our street, ஆர முயங்கார் – he does not embrace me well, he does not embrace me with love, ஏதிலாளர் – strangers, சுடலை போல – like a cremation ground, காணாக் கழிப – even though he sees me he passes by (ignoring me), மன், ஏ – அசைநிலைகள், நாண் அட்டு – killing modesty, killing shame, நல் அறிவு இழந்த – good reasoning/intelligence has been lost, காமம் – love, வில் உமிழ் கணையின் – like an arrow shot from a bow (கணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சென்று சேண்  பட – it goes far away and falls, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 258, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாரல் எம் சேரி, தாரல் நின் தாரே,
அலர் ஆகின்றால் பெரும, காவிரிப்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவின் அம் தோட்டு வேட்டை  5
நிரைய ஒள் வாள் இளைஞர் பெரு மகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைதல் கண்டே.

Kurunthokai 258, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero
Do not come to our street!
Do not give us your garland!

Gossip has risen, O lord,
since it has been lost,
her blemishless beauty,

like that of Ārcot town of Alisi,
father to Sēnthan who ties
his elephants with lifted tusks
on marutham trees on the
banks of River Kāviri
where many go to bathe,
a leader to young warriors who
feast on alcohol as food,
hunting herds of wild animals
and carrying bright, hellish spears.

Notes:  The heroine’s friend refused entry to the hero.  It could also be that she allowed entry.  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல்.  வாயில் உடன்பட்டது என்பதும் பொருந்தும்.  நற்றிணை 190 – சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  சேரி – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 231 – தெரு.  இரா. இராகவையங்கார் உரை – சேந்தன் பலராடு பெருந்துறை மருதிடத்து யானையைப் பிணித்த என்றது பலருமாறியப் பாணன் தலைவனைப் பரத்தையிடத்துப் பிணித்ததாகவும், அரியலம் புகவின் அம் தோடு வேட்டை என்றது அப் பரத்தையருடன் மகிழ்தற்குத் தன் செல்வம் இழப்பவன் ஆகவும் குறித்துக் கொள்ளலாம்.  வரலாறு:  சேந்தன், அழிசி, ஆர்க்காடு, காவிரி.

Meanings:  வாரல் எம் சேரி – do not come to our settlement, do not come to our street (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), தாரல் நின் தார் – do not give your garland, அலர் ஆகின்று ஆல் – since gossip has risen (ஆல் = அசைச் சொல், an expletive), ஏ – அசைநிலை, an expletive, பெரும – O lord, காவிரிப் பலர் ஆடு பெருந்துறை – big port in the Kāviri river where many play, மருதொடு பிணித்த – tied to the marutham trees, arjuna tree, Terminalia arjuna, ஏந்து கோட்டு யானை – elephant with lifted tusks, சேந்தன் தந்தை – father of Sēnthan, அரியலம் புகவின் – liquor as food (அம் – சாரியை, augment), அம் தோட்டு வேட்டை – hunting beautiful herds of animals, நிரைய – hellish (நிரயம் = hell), fierce, ஒள் வாள் – bright swords, இளைஞர் பெருமகன் – a leader to young warriors, அழிசி ஆர்க்காடு அன்ன – like Alisi of Ārcot, இவள் பழி தீர் மாண் நலம் – her blemishless fine virtue/beauty, தொலைதல் – losing, கண்டு – seeing it, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 262, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை, யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசின், அவரொடு சேய்நாட்டு  5
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

Kurunthokai 262, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Gossip will rise in town; there will
be uproar in our street; and your
unfair mother who hurts you constantly
will be left alone in the house.

I think about you being with him in a
faraway land in the foothills of a sky-high
blocking mountain, drinking water from
puddles created by the feet of large bull
elephants, that appear like the water in the
plots where sugarcane is planted,
and eating gooseberries that will make
your sharp teeth shine.

Notes:  The heroine’s friend urged her to eloped.  தோழி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது.  அறன் இல் யாய் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் நிலையை ஊகத்தால் அறிந்து அவள் விரும்பிய தலைவர்க்கு அவளை மணஞ் செய்வித்தற்கு முயறல் போக்கி, இற்செறித்தல் முதலியவற்றானே அலைத்துக் கொடுமை செய்தலின், அறனில் அன்னை என்றாள்.  ஈண்டு அறன் என்பது தலைவியைத் தலைவனோடே கூட்டுவிக்கும் செயலை.  அறன் இல்லாரோடு உடனுறைதலும் தகாது என்பாள் ‘தானே இருக்க தன் மனை’ என வெறுத்தோதினாள். குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்காயின் துவராலே பல் மாசுபடுதலின் அது தீரவும் நெல்லிக்காயைத் தின்ற பின்னர் நீர் பருகின்  அஃது இனிதாதலினாலும் ‘முள் எயிறு தயங்க நீருணல்’ என்றாள்.  தலைவனோடே இருந்து உண்ணப்படுவது வறிய நீரே ஆயினும் அமிழ்தினும் இனிதென்பதுபட ‘அவரொடு உணல்’ என்றாள்.  இது தான் நீ இப்பொழுது செய்யக்கிடந்த அறம் என்பாள் ‘ஆய்ந்திசின்’ என்றாள்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  ஊஉர் அலர் எழ – slander arose in town (ஊஉர் – இன்னிசை அளபெடை), சேரி கல்லென – loud noises in our streets,  loud noise in our neighborhood, ஆனாது அலைக்கும் – hurting constantly, அறன் இல் அன்னை – mother without fairness (அறன்-  அறம் என்பதன் போலி), தானே – she (ஏ – பிரிநிலை, exclusion), இருக்க – staying there, தன் மனை – in her house, யான் – me, ஏ – அசைநிலை, an expletive, நெல்லி தின்ற – gooseberry eating, முள் எயிறு – sharp teeth, தயங்க – to shine, உணல் – eating, ஆய்ந்திசின் – I have analyzed this, I have thought about this (சின் – தன்மை அசை, an expletive of the first person), அவரொடு – with him, சேய் நாட்டு – in a distant country, விண் தொட நிவந்த – sky touching high, விலங்கு மலை – blocking mountain, கவாஅன் – adjoining mountains, mountain slopes (இசை நிறை அளபெடை), கரும்பு நடு பாத்தி அன்ன – like plots where sugarcane is planted, பெரும் களிற்று – of a big male elephant, அடிவழி – footprints, depressions caused by the feet, நிலைஇய – stayed (செய்யுளிசை அளபெடை), நீர் – water, ஏ – அசைநிலை, an expletive

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 148
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்?
காதுகள் வீங்கியெறியில்
தாரியாதாகில் தலை நொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமே அன்றே
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடைசெற்று இளங்கன்று எறிந்திட்ட
இருடிகேசா. என்தன் கண்ணே!

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 217
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடியுண்டு உ ழுதானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 306
மாயவன் பின் வழி சென்று வழியிடைமாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமுமெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புதுவைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணனுக்காளரே.

குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, திவ்ய பிரபந்தம் 704
பையரவின் அணைப் பள்ளியினாய்
பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மையரி ஒண்கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள்பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பீ

திருமங்கை ஆழ்வார், திவ்ய பிரபந்தம் 1913
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே
அல்லில் தான் வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக்
கமலச் செவ்வாய் வெளுப்ப,
என் மகள் வண்ண மிருக்கின்றவா நங்காய்.
என் செய்கேன் என் செய்கேனோ.

திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மடல், திவ்ய பிரபந்தம் 2785
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்,
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்னிலைமை எல்லாம் அறிவிப்பன், தான்முன நாள்.

திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மடல், திவ்ய பிரபந்தம் 2786
மின்னிடை ஆச்சியர்த் தம் சேரிக் களவிங்கண்,
துன்னு படல் திறந்து புக்கு,
தயிர் வேண்ணெய்.

நம்மாழ்வார் திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3520, தலைவியின் தாய் சொன்னது
கொல்லை என்பர் கொலோ குணம் மிக்கனள் என்பர் கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

நம்மாழ்வார் திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3525
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கென்று,
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப்போய்,
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே,
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.