சிற்றில்  – Little sand houses

குறுந்தொகை 326, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தலைவி சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர்
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னாமைத்தே.

Kurunthokai 326, Unknown poet, Neythal Thinai – What the heroine said, as the hero listened from nearby
If the lord of the shores leaves
me even for a day,
the love born uniting with
him in the seashore groves,
……….where young girls with
……….big, bamboo-like arms,
……….who wear woven garlands,
……….bathe in the ocean and
……….build little sand houses,
brings me many days of distress.

Notes:  வரைதலே தக்கதென்பதைத் தலைவி புலப்படுத்தியது.

Meanings:  துணைத்த கோதை – tied garlands, woven garlands, பணைப் பெரும் தோளினர் – those with bamboo-like big arms, கடலாடு மகளிர் – girls bathing in the ocean, கானல் இழைத்த சிறு மனை – little house built in the seashore grove, புணர்ந்த – united, நட்பு – friendship, love, ஏ – அசை நிலை, an expletive, தோழி – O friend, ஒரு நாள் துறைவன் துறப்பின் – if he abandons me even for a day, if he leaves me even for one day, பன்னாள் வரூஉம் – it will come for many days (வரூஉம் – இன்னிசை அளபெடை), இன்னாமைத்து – it is distressing, ஏ – அசை நிலை, an expletive

நற்றிணை 123, காஞ்சிப் புலவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந்துயரம் ஆகிய நோயே.

Natrinai 123, Kānji Pulavanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, oh friend!
Tell me why you are not playing
with friends at the grove in this
early morning hour, plucking
honey-fragrant red waterlilies,
weaving them with leaves and
wearing skirts beautifully,
building little sand houses
and decorating them with kolams,
in the white sandy ocean shores
with tall palmyra trees with
curved nests on fronds on which
herons that fly in rows and
feed in the vast backwaters rest
in the pitch darkness of night.

You are not playing little games
watching crabs that live in their
beautiful, wet mud holes under
thālai trees with curved trunks
that are lashed by stinking waves.

You are afflicted with this disease
which has given you great sorrow!

Notes:  மாங்குடி கிழார், மாங்குடி மருதனார், மதுரை காஞ்சி புலவர் ஆகிய பெயர்கள் ஒரே புலவருக்கு உரியன என்று கருதப்படுகின்றது.   வரி புனை சிற்றில் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிடுதலையுற்ற சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட மணல் சிறுவீடு.  Natrinai 123, 283 and 378 have descriptions of kolams.

Meanings:  உரையாய் – tell me, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, இருங்கழி – dark backwaters, vast backwaters, இரை ஆர் குருகின் – of the herons/egrets/storks that feed, நிரை பறைத் தொழுதி – bird flocks that fly in a row, வாங்கு – curved, மடல் – palm leaves, குடம்பை – nest, தூங்கு இருள் துவன்றும் – they reach when it is pitch dark, பெண்ணை ஓங்கிய – tall palmyra trees, flourishing palmyra trees, வெண்மணல் – white sand, படப்பை – garden, கானல் – seashore grove, ஆயமொடு – with friends, காலைக் குற்ற – plucking in the morning, கள் – honey, nectar, கமழ் – fragrance, அலர – bloom, தண் நறுங்காவி – cool fragrant red colored waterlilies, blue colored waterlilies, அம் – beautiful, பகை நெறித் தழை – woven garment with leaves and flowers that differ in color, அணி பெறத் தைஇ – wearing beautifully (தைஇ – சொல்லிசை அளபெடை), வரி புனை சிற்றில் – small house with kolams, small houses with decorations, பரி சிறந்து ஓடி – running around and playing, புலவு – fish smelling, திரை உதைத்த – playing in the waves, கொடுந்தாள் கண்டல் – thālai with curved trunks, Pandanus odoratissimus, சேர்ப்பு – residing, living, ஏர் – beautiful , ஈர் அளை – wet holes, அலவன் பார்க்கும் – watching the crabs, சிறு விளையாடலும் – playing little games, அழுங்கி – in distress, நினைக்குறு – when thinking about it, பெருந்துயரம் ஆகிய நோயே – the disease that gives great sorrow (ஏ – அசை நிலை, an expletive)

அகநானூறு 90, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணை, தோழி தலைவனிடம் சொன்னது
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெரும் துறை
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ
இல் வயின் செறித்தமை அறியாய் பன்னாள்
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின் வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
அரும் திறள் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.

அகநானூறு 110, போந்தைப் பசலையார், நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக்
கொடும் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன் நினக்கே கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக எய்த வந்து
தட மென் பணைத்தோள் மட நல்லீரோ
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ எனக் காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யான் என அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன நோக்கித் தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே.

அகநானூறு 230, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நெய்தல் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாள் நுதல் குறுமகள்
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் எனக்
கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கை வல் பாகன் பையென இயக்க
யாம் தற்குறுகினமாக ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள் தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

அகநானூறு 250, செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எவன் கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்
கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற் கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய்
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே.

சிற்றில் சிதைத்தல்

நற்றிணை 378, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணி மொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.

Natrinai 378, Vadama Vannakkan Perisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The long nights pass slowly.
Your feelings of love increase
and your eyes are unable to sleep.

The clear ocean waves roar
like the throbbing beats of drums
and the sounds of the ocean
come little by little, like the
moans of those with old wounds.

Even when the night has passed,
daytime has not appeared and
there is no end to your distress.
Women in nearby houses gossip
on seeing the pallor on your body.

It has come to this, my friend!
This is because of the close friendship
we made without proper judgment,
with the lord of the cold-water shores,
who came and broke our little sand
house with kolams, and spoke enticingly.

Notes:  தலைவன் பிரிவால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தும் ஆற்றாளாயினள்.  அவளிடம் தோழி கூறியது.  கலித்தொகை 51- தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறு பட்டி.  புறநானூறு 209 – தெண் கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்.  வரி ஆர் சிறு மனை (9) –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிட்ட சிறிய மணல் சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட சிறு மணல் வீடு.  Natrinai 123, 283 and 378 have descriptions of kolams.

Meanings:  யாமமும் நெடிய கழியும் – the long nights pass slowly, காமமும் கண்படல் ஈயாது பெருகும் – feelings of love increases and the eyes cannot close to sleep, தெண் கடல் முழங்கு திரை – the clear ocean’s loud waves, முழவின் பாணியின் – like the beats of drums (பாணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பைபய – very slowly (பையப்பைய பைபய என மருவியது), பழம் புண் உறுநரின் – like those with old wounds, பரவையின் ஆலும் – the waves make sounds in the ocean, ஆங்கு – there, அவை நலியவும் – these cause distress, நீங்கியாங்கும் – even after leaving, இரவு இறந்து – night passing, எல்லை தோன்றலது – daytime has not appeared, அலர்வாய் – mouths that gossip, அயல் இல் பெண்டிர் – women who live in nearby houses, பசலை பாட – they gossip about the pallor on your body, ஈங்கு ஆகின்றால் தோழி – the situation has become such oh friend (ஆல் – அசைநிலை), ஓங்கு மணல் – tall sand mounds, வரி ஆர் சிறு மனை – small house with kolams/lines/designs, சிதைஇ – broke (சொல்லிசை அளபெடை), வந்து – came, பரிவுதரத் தொட்ட – with kindness touched, பணி மொழி நம்பி – believing his enticing/humble words, பாடு இமிழ் – loud sounding, பனி நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the cold water shores, நாடாது – not analyzing, இயைந்த – being close, நண்பினது அளவே – the extent of the friendship (ஏ – அசை நிலை, an expletive)

கலித்தொகை 51, தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் தொடீஇ!  கேளாய்!  தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு, அன்னை
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
“அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா
அன்னை அலறிப் படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.

Kalithokai 51, What the heroine said to her friend
Listen my friend donning bright bangles!
That wild brat who used to kick our little sand
houses on the street with his leg, pull flower
strands from our hair, and yank striped balls
from us causing agony, came one day when
mother and I were at home.

“O, people of this house! Please give me some
water to drink,” he said. Mother said to me,
“Pour water in the thick gold vessel, and give it
to him to drink, my daughter with bright jewels.”
And so I went unaware that it was him.

He seized my bangled wrist and squeezed it,
causing distress. “Mother, see what he has done,”
I shouted.
My distressed mother came running with a shriek
and I said to her “He had hiccups drinking water.”
Mother stroked his back gently, and asked him to
drink slowly.

He looked at me through the corners of his eyes
and gave me killer looks. He then smiled in friendship,
that thief!

Meanings:  சுடர் தொடீஇ – O bright bangled one!, கேளாய் – listen to this, தெருவில் நாம் ஆடும் – when we played on the street, மணல் சிற்றில் – little sand houses, காலின் சிதையா – he kicked with his feet and broke, அடைச்சிய கோதை – woven flower strands, பரிந்து – broke, ruined, வரிப் பந்து கொண்டு ஓடி – took away our striped ball and ran away, நோதக்க செய்யும் – causing pain, சிறு பட்டி – the irresponsible boy, the little brat, மேல் ஓர் நாள் – a day a while ago, அன்னையும் யானும் இருந்தேமா – when mother and I were together, இல்லிரே – O those in this house, உண்ணு நீர் வேட்டேன் – I am requesting drinking water, என வந்தாற்கு – to him who came in this manner, அன்னை – mother, அடர் பொன் சிரகத்தால் வாக்கி – give him in the thick gold bowl, give him in a thick iron bowl, சுடர் இழாய் – O one wearing bright jewels, உண்ணு நீர் ஊட்டி வா – give him water to drink, என்றாள் – she said, என யானும் – and so I, தன்னை அறியாது சென்றேன் – I went unaware that it was him, மற்று – then, என்னை வளை முன்கை பற்றி – he grabbed my bangled forearm, பற்றி நலிய – as he held and distressed me, தெருமந்திட்டு – I became confused, அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் – mother! see what he has done, அன்னை அலறி படர்தர – as mother screamed and came, தன்னை யான் – I said about him, உண்ணு நீர் விக்கினான் – he hiccuped while drinking, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ – as mother stroked his back gently, மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி –  he then looked at me through the corner of eyes giving killer looks, நகை கூட்டம் – he smiled in friendship, he smiled with love, அக் கள்வன் மகன் – that thief

 

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் பாடல் 41
முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன் தன்
நெற்றி இருந்தவா காணீரே! நேரிழையீர்! வந்து காணீரே!

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 235
பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே!

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் பாடல் 288
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில! கோவிந்தனோடு இவளைச்
சங்கையாகி என் உள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 514
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்!
தீமை செய்யும் சிரீதரா! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 515
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்!
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 516 
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய்! உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்!
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்!
தெண் திரைக்கடற் பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 517
பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்!
செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே !

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 518
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்!
கள்ள மாதவா! கேசவா! உன் முகத்தன கண்கள் அல்லவே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 519
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம்! கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா! எம்மை வாதியேல்!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 520
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூளறும்,
சேதுபந்தம் திருத்தினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 521
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்! சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே! கடல்வண்ணனே!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 522 
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!
முற்ற மண்ணிடம் தாவி விண் உற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்?

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 523 
சீதை வாயமுதம் உண்டாய்! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன்தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே!

நம்மாழ்வார் திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3470
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன் தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
சிறு சோறுங் கண்டு, நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே!