சிறுசோறு 

அகநானூறு 110, போந்தைப் பசலையார், நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக்
கொடும் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன் நினக்கே கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக எய்த வந்து
தட மென் பணைத்தோள் மட நல்லீரோ
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ எனக் காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யான் என அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன நோக்கித் தான் தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே.

Akanānūru 110, Pōnthai Pasalaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the foster mother
If her mother knows about it, let her know about it!
If those in this town who gossip know about it,
let them know about it.  I will not tell you anything
that is not true.  I will vow to tell you the truth
in front of the god in Puhār with fierce eddies.

When we were playing in the grove with friends
wearing garlands, swimming in the ocean, building
little sand houses, cooking play food and removing
our stress, a man came near us and asked,
“O young women with broad, delicate arms like
like bamboo!
Daytime has ended, and I am very tired.  Can I eat
food on your tender leaves and stay in your village?”
On seeing him, we hung our heads down, hid
behind each other, and uttered softly, “This food is not
suitable for you.  It is made with beached, fatty fish.”
Then we said, “Can we go and see the ships with tall
flags?”, broke our sand houses and moved away
without standing there.

Among everyone he looked at me, and said sadly,
“One with a fine forehead!  I am leaving”, and I replied,
“You can leave.”  He looked at me and held on to his
chariot ornament.  That image is still clear in my eyes!

Notes:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல் உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு எளித்தல் (தலைவனை எளியவனாகக் கூறுதல்) பொருந்தும்.  இழிந்த கொழு மீன் (16-17) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  இழிந்ததான கொழுமீன், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இழிவாய கொழு மீன்.  Translated as ‘kolumīn fish that only low people eat’ by George Hart.  Sangam scholar and Tamil Grammarian Dr. V.S. Rajam interprets இழிந்த மீன் as ‘beached fish’ in her book, ‘Reference Grammar of Classical Tamil poetry’.  She translates எறி திரை தந்திட இழிந்த மீன் (Kalithokai 121-20) as ‘the fish which came down the shore as the tossing waves brought and dropped them’.  She adds, ‘in most cases the word இழிந்த signifies movement in a lower direction’.  கலித்தொகை 121 – எறி திரை தந்திட இழிந்த மீன் – நச்சினார்க்கினியர் உரை – எறிகின்ற திரை ஏறக் கொண்டு வந்து போடுகையினால் எக்கரிலே கிடந்த மீன், கலித்தொகை 131- திரை உறப் பொன்றிய புலவு மீன்.  தொடலை ஆயமொடு (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மாலை போன்ற ஆயத்தாரோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாலை போலத் தொடர்ந்து வரும் ஆயத்தாரோடு, உ. வே. சாமிநாதையர் உரை குறுந்தொகை 294 பாடலுக்கு – மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு.  கோதை ஆயமொடு (அகநானூறு 49-16, 60-10,180-2) – மாலையையுடைய மகளிர் என்ற பொருளே பொ. வே. சோமசுந்தரனார் மற்றும் இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரைகளில் உள்ளன.  காணாமோ (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காண்போம் அல்லமோ, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – காண்போம் அல்லேமோ, ச. வே. சுப்பிரமணியன் உரை – காண்போம்.  ஒப்புமை:  ஆயமொடு – அகநானூறு 230 – விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு மனைபுறம் தருதி ஆயின் எனையதூஉம் இம்மனைக் கிழமை எம்மொடு புணரின் தீதும் உண்டோ மாதராய்.  சிதையா – சிதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   அன்னை அறியினும் – if mother knows about it (நற்றாய்), அறிக – let her know about it, அலர்வாய் – mouths that gossip, அம்மென் சேரி கேட்பினும் கேட்க – if the people in our loud village/street hear about it, it is alright (சேரி – ஆகுபெயர் அங்கு வாழ்பவர்களுக்கு), பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி – I will not tell anything different, கொடும் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே – I will give my strong promise to you in front of the God in Poompuhār with strong whirlpools/eddies/swirls (புகாஅர்- இசை நிறை அளபெடை), கானல் – seashore grove, தொடலை ஆயமொடு – with friends wearing garlands, கடல் உடன் ஆடியும் – playing in the ocean, சிற்றில் இழைத்தும் – and making little sand houses, சிறு சோறு குவைஇயும் – and cooking and heaping play rice (குவைஇ – சொல்லிசை அளபெடை), வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனமாக – when we were there playing a little and ending our stress/sorrow, எய்த வந்து – came near, தட – curved, large, மென் – delicate, பணைத்தோள் – thick arms, bamboo-like arms, மட நல்லீரே – oh naïve young women, oh delicate young women, oh pretty young women, எல்லும் எல்லின்று – day time has lost its light, day time has turned to darkness, அசைவு மிக உடையேன் – I am very tired, மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ – can I eat on your delicate leaves and stay in your noisy village (கல்லென் – ஒலிக்குறிப்பு மொழி, மற்று – வினைமாற்றின்கண் வந்தது), என – thus, மொழிந்தனனே ஒருவன் – a man said (மொழிந்தனனே – ஏகாரம் அசை நிலை, an expletive), அவன் கண்டு இறைஞ்சிய முகத்தெம் – on seeing him we lowered our faces, புறம் சேர்பு பொருந்தி – hiding behind each other, இவை நுமக்கு உரிய அல்ல – these are not suitable for you, இழிந்த கொழு மீன் வல்சி – food cooked with fatty beached fish, food cooked with fish that was brought down to the shore by the waves, என்றனம் – we said, இழுமென – with soft sounds (ஒலிக்குறிப்பு), நெடுங்கொடி – tall flags, நுடங்கும் – swaying, நாவாய் தோன்றுவ – ships that appear, காணாமோ – can we see , எனக் காலின் சிதையா – crushed with his legs, broke with his legs, நில்லாது – not standing, பெயர்ந்த – moved, பல்லோர் உள்ளும் – among many, என்னே குறித்த நோக்கமொடு – looked specifically just at me, நன்னுதால் – O! one with a fine forehead, ஒழிகோ யான் – I am leaving,  என – thus, அழிதகக் கூறி – he said sadly, யான் பெயர்க – I said ‘you may leave’, என்ன நோக்கி – looking at me, தான் தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் – like he was holding his tall chariot’s decorative ornament and stood, இன்றும் என் கட்கே – my eyes can still see him (கட்கே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 194
செப்போது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!
முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்,
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான்.  காப்பிட வாராய்!

நம்மாழ்வார் திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3470
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன் தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
சிறுசோறுங் கண்டு, நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே!