கொல்லி மலைப் பாவை

குறுந்தொகை 89, பரணர், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குட வரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.

Kurunthokai 89, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
My friend with delicate features,
is like the fine goddess, painted by
a fierce, ancient, black-eyed god
on the west side of Kolli Mountain
of Poraiyan with large jewels.

She sang about about her lover in
vallai songs, when she pounded
grain on a stone mortar with a huge
base and a deep well.

Strangers talk ill of her now.
This is a town with ignorant people.
What’s the use of worrying about it?

Notes:  ஊரினர் அலர் தூற்றுகின்றனர்.  விரைவில் வரைதல் வேண்டும் என தலைவனுக்கு உணர்த்தியது.  வரலாறு:  பொறையன், கொல்லி.  ஏதின் மாக்கள் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அயலோராகிய அறிவிலிகள், அயற்றன்மை உடையார், உ. வே. சாமிநாதையர் உரை – மாக்கள் என்றாள் தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இன்மையின்.  பெரும்பூண் – உ- . வே. சாமிநாதையர் உரை பேரணிகலன், இது மார்பில் அணியப்படுவது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய அணிகலனையுடைய.

Meanings:  பாவடி – big base, உரல – of the ural, pounding stone’s (அ சாரியை), பகுவாய் – big depression, வள்ளை – vallai songs, ஏதின் மாக்கள் – strangers, நுவறலும் நுவல்ப – they will talk ill, அழிவது எவன் – what is the use of worrying about it, கொல் – அசை நிலை, an expletive, இப்பேதை ஊர்க்கு – for this town with ignorant people, ஏ – அசை நிலை, an expletive, பெரும்பூண் – big jewels, big necklace, பொறையன் – Chēran, பேஎ முதிர் – fierce and ancient (பேஎ – இன்னிசை அளபெடை), கொல்லி – Kolli Mountain, கருங்கண் தெய்வம் – black eyed god, குட வரை எழுதிய – etched/painted on the west side of the mountain, நல் இயல் பாவை – woman with good traits, அன்ன – like, இம் – this, மெல்லியல் குறுமகள் – women with delicate traits, பாடினள் குறின் – if she sings as she pounds, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 100, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறு குடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குட வரைப்
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணைப் பெருந்தோளே.

அகநானூறு 338, மதுரைக் கணக்காயனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக் கூறும்
மறங் கெழு தானை அரசர் உள்ளும்
அறங் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறஞ் சாய்த்து எழுந்த வலன் உயர் திணிதோள்
பலர் புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொறுப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன் அருந்துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இருங்கானத்துக் கொல்லி போலத்
தவாஅலியரே நட்பே அவள் வயின்
அறாஅலியரே தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1115
அலங்கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும்,
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே.