தலைவியின் கூந்தலின் நறுமணம்
குறுந்தொகை 2, இறையனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?
Kurunthokai 2, Iraiyanār, Kurinji Thinai – What the hero said about his lover’s beauty
O beautiful winged bee
whose life is choosing honey!
Tell me what you found and not
what pleases me!
Is there a flower with more
fragrance than the hair of my
beloved woman with perfect teeth,
peacock nature and enduring love?
Notes: The hero said this after uniting with the heroine for the first time. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் கூறியது. நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக் களவியல் 10ஆம் சூத்திரத்துக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது. பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்”. பொ. வே. சோமசுந்தரனார் உரை – தும்பி விடை தாராதாகவும் விடை கூறுவது போன்று வினவியது, பாடல் சான்ற புலனெறி வழக்கம். இதனை ‘சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்’ (தொல்காப்பியம் பொருளியல் 2) என வரும் தொல்காப்பிய விதியாலும் உணர்க. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கூந்தலின் என்றதன் ஐந்தனுருபு எல்லைப்பொருளேயன்றி உவமைப் பொருளுமாம். அஞ்சிறை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய சிறகு, இரா. இராகவையங்கார் உரை – அகச்சிறை, உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளிடத்து சிறை, அழகிய சிறையுமாம்.
Meanings: கொங்கு – honey, pollen, தேர் – choose, வாழ்க்கை – life, அம் சிறை – pretty wings, inner wings, தும்பி – bee, காமம் – what you desire, what I desire, for me to be happy (காமம் – விருப்பம்), செப்பாது – not uttering, கண்டது மொழிமோ – tell me what you saw (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), பயி்லியது – due to habit (தொழிற்பெயர்), கெழீஇய – with closeness, abundantly, greatly (செய்யுளிசை அளபெடை), நட்பின் – with love, with friendship (இன் சாரியை), மயில் இயல் – peacock-like nature, செறி எயிற்று – with close teeth, with perfect teeth, அரிவை கூந்தலின் – like the young woman’s hair (கூந்தலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), நறியவும் – with fragrance, உளவோ – is it there, நீ அறியும் பூ – among the flowers you know (பூ – பூக்களுள், ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது), ஏ – அசை
நம்மாழ்வார் திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2532, தலைவன் சொன்னது
வண்டுகளோ வம்மின்! நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே?