குவளை போல் கண்கள்

குறுந்தொகை 13, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே.

Kurunthokai 13, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
He gave me this disease,
my friend,
the man who was with
me on a verdant spot near a
dark rough boulder,
washed by heavy rains and
looking like a spotlessly
scrubbed elephant.

My pretty eyes, like blue
waterlilies, have turned yellow.

Notes:  The heroine who was sad, said this, when the hero was away.  பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தன் ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.  உ. வே. சாமிநாதையர் உரை – துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசு நீங்கப் பெற்ற நாடன் இவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தனன் என்பது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஏதந்தராத துறுகல் ஏதந்தரும் யானை எனக் காண்பார் வருந்தத் தாங்கும் நாடன் என்றதனானே, இனிமை தருங் கூட்டமும் பிரிந்திடுவானோ என்ற கவற்சியால் இனிமை பயவாதிருக்கும்படி ஒழுகினான் என்பதாம்.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  ஆர்ந்த (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசலை நிறம் கொண்டன, உ. வே. சாமிநாதையர் உரை – பசலை நிறம் நிரம்பப் பெற்றன, தமிழண்ணல் உரை – முழுவதும் பசலை நிறம் ஆகிப்போயின.

Meanings:  மாசு அற – without blemish, perfect, கழீஇய – washed (செய்யுளிசை அளபெடை), யானை போல – like an elephant, பெரும் பெயல் – heavy rain, உழந்த –  cleaned, இரும்பிணர் – dark/large and rough, துறுகல் – boulder, பைதல் – wet, green, cool, ஒரு தலை – a place, சேக்கும் – was with me, stayed with me, நாடன் – the man from such country, நோய் தந்தனன் – gave this disease, ஏ – அசைநிலை, an expletive, பசலை ஆர்ந்த – they have become yellow, they have become yellow totally, நம் – my, குவளை – blue waterlily, Blue nelumbo, Nymphaea odorata,  அம் கண் – beautiful eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 167, கூடலூர் கிழார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியைப் பற்றி நற்றாயிடம் சொன்னது
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே.

Kurunthokai 167, Koodalūr Kizhār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother
Wearing a garment that was not
washed after she mashed mature
curds and wiped on it with her
delicate fingers that resemble glory
lily petals, she cooked.

Smoke from her cooking spread
around and touched her kohl-lined
eyes that are like blue waterlilies.

She made sweet tamarind curry that
he enjoyed and ate.
Her face revealed her happiness in
a delicate manner, the young woman
with a bright forehead.

Notes:  The foster mother who visited the couple in their marital house, said this to the heroine’s mother on her return.  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  விரல் கழுவுறு கலிங்கம் (1-2) – உ. வே. சாமிநாதையர் உரை – விரலை துடைத்துக் கொண்ட ஆடையை,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோய்த்துத் தூய்மை செய்யப்பட்ட ஆடை. விரல் கழாஅது கழுவுறு கலிங்கத்தை உடுத்தென்க.  விரலைக் கழுவாமலே நெகிழ்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு தாளிப்பாயாயினள்.  கமழ  (3) – உ.வே.சா உரையில் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரையில் ‘கழும’ என உள்ளது.  கண்ணிற் புகை நிறைய என அதன் பொருள் உள்ளது.

Meanings:  முளி தயிர் – well set curds, thick curds (முதிர்ந்த தயிர்), பிசைந்த காந்தள் மெல்விரல் – kneaded with her kāntal-like delicate fingers, malabar glory lily, Gloriosa superba, கழுவுறு கலிங்கம் – clothing on which the fingers were wiped, washed clothing, கழாஅது உடீஇ – she wore without washing (கழாஅது – இசை நிறை அளபெடை, உடீஇ – சொல்லிசை அளபெடை), குவளை உண்கண் – kuvalai-flower-like eyes with kohl, blue waterlily, Blue nelumbo, Nymphaea odorata, குய் புகை கமழ- frying smoke fragrance spread, தான் துழந்து அட்ட – mixed and cooked by herself, தீம் புளிப் பாகர் – sweet tamarind curry (sauce), இனிதெனக் கணவன் உண்டலின் – since her husband ate it considering it tasty, நுண்ணிதின் – in a delicate manner, மகிழ்ந்தன்று – it was happy (her face), ஒள் நுதல் – the woman with a bright forehead (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), முகன் – the face (முகன் – முகம் என்பதன் போலி), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 339, பேயார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிது மன் வாழி தோழி மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங் கலங்கடையே.

Kurunthokai 339, Pēyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
It was very sweet to you,
when he embraced your fine
chest adorned with a garland
with many flowers,
your lover from the land where
thick, bright, fragrant akil smoke
rolls down the mountain slopes
like clouds that do not rain,
and settles in the villages of the
mountain dwellers.

Now sickly pallor has come upon
you, bringing tears to your eyes,
dark like the petals of blue waterlily
flowers.  May you live long, O friend!

Notes:  The heroine’s friend said this to the heroine, urging her not to worry, when the hero went to earn wealth for their married life.  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தே வருந்திய தலைவியை நீ வருந்துதல் தகவு இல்லை என்று இடித்துரைத்துத் தோழி கூறியது.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  நறை அகில் – fragrant akil wood, eaglewood, வயங்கிய – bright, flourishing, நளி – thick, dense, புன நறும் புகை – forest’s fragrant smoke, உறை அறு – waterless, done with raining, not raining, மையின் போகி – went like the clouds (மையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சாரல் – mountain slopes, குறவர் பாக்கத்து – in the village of the mountain dwellers, இழிதரும் – comes down, நாடன் – man from such country, மயங்கு மலர்க் கோதை – flower garland with mixed flowers, நல் மார்பு – fine chest, முயங்கல் – to embrace, இனிது – it is sweet, மன் – very much, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, மா இதழ்க் குவளை – dark/big leaved blue waterlilies, Blue nelumbo, Nymphaea odorata,  உண்கண் – kohl-rimmed eyes, கலுழ – to cry, பசலை – pallor, ஆகா – not becoming, ஊங்கலங்கடை – situation before it came (ஊங்குக் கடை என்க, அல்லும் அம்மும் வேண்டாவழிச் சாரியை), ஏ – அசைநிலை, an expletive

நற்றிணை 6, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது
நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே.

Natrinai 6, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby
Her dark beauty is like the fiber-removed
stems of thick, white waterlilies and her
moist eyes are like blue waterlilies that rise
up.  The loins of this beauty have yellow
beauty spots.

If there is a messenger to talk to this pretty
young woman with thick arms,
she without malice will not ask, “who is he?”

The young woman with thick black hair
with the fragrances of forests
owned by Ōri owning mighty bows,
……….where frolicking, delicate deer
……….eat ripe kumilam fruits with curved
……….stems that grow along the forest paths,
will be giddy with joy, if she knows that I
have come.

Notes:  இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தலைவியிடம் சென்று கூறுவாரை நான் பெறவில்லையே என்று வருந்திக் கூறியது.  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  பெரும் பேதுறுவள் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – களிப்பினால் பெரிதும் மகிழ்வாள், ஒளவை துரைசாமி உரை – பெருங் கலக்கமுற்று வருந்துவள்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புணர்ச்சி விருப்பம் குறித்ததால் இப்பாட்டு குறிஞ்சியாயிற்று.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு = காம்பு.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  குமிழின் கனி மானுக்கு உணவாகும் என்றது யாம் வந்திருக்கின்றேம் என்று கூறும் அச் சொல்லானது நமது தலைவிக்கு மகிழ்வு அளிக்கும் என்றதாம்.  வரலாறு:  ஓரி.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Natrinai 6, 52, and 320 have references to Ōri.

Meanings:  நீர் வளர் ஆம்பல் – white waterlily flowers growing in the water, தூம்புடை திரள் கால் – thick stems with hollow cores, நார் உரித்தன்ன – like the fibers removed, மதனின் – with beauty, மாமை – dark color, குவளை அன்ன – like blue waterlilies, ஏந்து எழில் – with beauty, very beautiful, lifted and beautiful, மழைக் கண் – moist eyes, திதலை அல்குல் – yellow beauty spots on her loins, பெருந்தோள் – thick arms, rounded arms, குறுமகட்கு – to the young woman, எய்தச் சென்று – going to her, செப்புநர் – somebody who can tell her, பெறினே – if I can get (ஏ – அசைநிலை, an expletive), இவர் யார் என்குவள் அல்லள் – she will not ask, ‘who is he’, முனாஅது – without hatred (இசை நிறை அளபெடை), அத்த – of the wasteland, குமிழின் – kumilam tree’s, Gmelina arborea, கொடு மூக்கு – curved stems, விளை கனி – ripe fruits, எறி மட மாற்கு – for the leaping innocent deer, for the leaping young deer, for the leaping delicate deer, வல்சி ஆகும் – they will become food, வல் வில் ஓரி – king Ōri with a strong bow, கானம் – forest, நாறி – having the fragrances, இரும் – black, பல் ஒலிவரும் கூந்தல் – very thick flowing hair, பெரும் பேதுறுவள் – she will be greatly bewildered, யாம் வந்தனம் எனவே – if she knows that I have come (யாம் – தன்மைப் பன்மை, first person plural.  வந்தனம் – தன்மைப் பன்மை, first person plural.  ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 37, பேரி சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி வலன் ஏர்பு
ஆர்கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.

Natrinai 37, Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
It will be good if you
go with her to the ancient,
blighted, vast forest where
tangled bushes are parched,
cattle herds graze on dry grass
and, a clear bell from a cow
tinkles very gently.

If you leave the sharp-toothed
girl without any kindness, her
eyes looking like dark waterlilies
surrounded by water, will
shed tears.  She will struggle like
a doe separated from its stag.
I will not be able to tolerate that!

It will be like sad evening time to her,
when clouds rise up with strength and
come down with roaring thunder that
chops distressing, fierce heads of snakes!

Notes:  வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி தலைவனிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்’ என்ற பகுதியில் இப்பாட்டினை எடுத்தோதிக்காட்டி, ‘இது வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்து கொண்டிரு என்றதற்குத் தோழி கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – பாம்பின் தலையைத் துமித்து பெருமுழக்கத்தோடு திரியும் இடியேறு போல, ஏதிலாட்டியார் தலைமடங்க முரசு முழங்க நீ இவளை வரைந்துகொள்வான் வருதல் வேண்டும்; அதற்குரிய கார்காலம் அடுத்து வருதற்கு அமைந்தது என்பது குறிப்பு.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  அணங்குடை அருந்தலை – அகநானூறு 108, நற்றிணை 37, பரிபாடல் 1-1.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  பிணங்கு அரில் – tangled bushes,  வாடிய – dried, பழவிறல் – old fertility, robustness, நனந்தலை – wide space, உணங்கு ஊண் – grazing on dry bushes, ஆயத்து – of herds, ஓர் ஆன் தெள் மணி பைபய இசைக்கும் – clear bells ring very slowly from a single cow (பைபய – பையப்பைய பைபய என மருவியது), அத்தம் – wasteland, வை எயிற்று இவளொடும் செலினோ – if you go with this sharp-toothed young woman (ஓ – அசைநிலை, an expletive) நன்றே – it will be good (ஏ – அசைநிலை, an expletive), குவளை நீர் சூழ் மா மலர் அன்ன – like waterlilies surrounded by water, கண் அழ – eyes crying, கலை ஒழி பிணையின் கலங்கி – in distress like a doe that is separated from its stag (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, கலங்கி – கலங்க எனற்பாலது கலங்கி எனத் திரிந்தது), மாறி அன்பு இலிர் அகறிர் ஆயின் – if you leave her without kindness, என் பரம் ஆகுவது அன்று – I cannot handle that burden (பரம் – பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்), இவள் அவலம் – her distress, நாகத்து அணங்குடை அருந்தலை – distressing fierce heads of snakes, உடலி – enraged, வலன் ஏர்பு – rising on the right side, rising up with strength, ஆர்கலி நல் ஏறு – very loud fine thunder, திரிதரும் – moving, கார் செய் மாலை – evenings of the rainy season, வரூஉம் போழ்தே – when it arrives (வரூஉம் – இன்னிசை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 160, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.

Natrinai 160, Unknown Poet, Kurinji Thinai – What the hero said to his friend
Before I met the young woman
with lifted, pretty breasts with
pallor spots, pretty five-part braid,
bright, red forehead on which her
splendid honey-flowing hair drapes,
and beautiful, moist eyes with lines,
that look like fresh blue waterlilies
tied together, that grow in ancient
ponds,

I was kind, friendly, modest, good,
useful, cultured, and proud, and
knew to behave well, better than you!

Notes:  இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மெய்தொட்டு பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பா உரையில் ‘நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, இது நிகழ்பவை உரைப்பது என்பர் நச்சினார்க்கினியர்.  மலர்ப் பிணையல் அன்ன கண்கள் – அகநானூறு 149-18 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், நற்றிணை 160 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், பரிபாடல் 2-53 – கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்.

Meanings:  நயனும் – and kindness, நண்பும் – and friendship, நாணு – being modest, நன்கு உடைமையும் – and having goodness, பயனும் – and being useful, பண்பும் – and having culture, பாடு அறிந்து ஒழுகலும் – to know pride and behave well, நும்மினும் அறிகுவென் – I had more than you, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, கம்மென – quickly (கம்மென – விரைவுக்குறிப்பு), எதிர்த்த தித்தி – pallor spots that have appeared, ஏர் இள வன முலை – rising young firm breasts, விதிர்த்து விட்டன்ன – like it is dispersed, அம் நுண் சுணங்கின் – with beautiful fine pallor spots, ஐம்பால் வகுத்த கூந்தல் – hair separated and made as five-part braids, செம்பொன் திரு நுதல் – beautiful forehead that is bright red, பொலிந்த – bright, splendid, தேம் பாய் ஓதி – honey-flowing hair (from flowers) (தேம் தேன் என்றதன் திரிபு), முதுநீர் இலஞ்சி – pond with ancient water, பூத்த குவளை – blossomed blue waterlilies, எதிர்மலர் – fresh flowers, similar flowers (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள்), பிணையல் அன்ன – garland like, இவள் அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே – before I saw her proud moist eyes with red lines, before I saw her luscious moist eyes with red lines (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 271, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெருங்காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று
வீ சுனைச் சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு
மா இருந்தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே.

Natrinai 271, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
A big-eared, dark buffalo calf sleeps
on fresh pollen dust.
Such is our flourishing cool house
that my daughter with eyes like bluelilies
left, to be with a strong young man who
confused her with his lies, and took her
on the path to a distant country.

She ate gooseberries in a rare grove on the
path and drank water from a nearby shallow
spring.  I went when the moon’s rays spread,
looking for her, where she used to play with
her friends, cutting tender palm fronds.

May the god of death perish without strength,
for not putting me in a large urn!

Notes:  தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளுதலும் ஓர் அறநெறியே என்பது உணரினும், அயலார் அலர் கூறுவதால் வருந்திய தாய் மருட்சியுடன் கூறியது.  குழவி (1) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).   இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமை கன்று தாதிலே துயிலும் என்றது, உடன் கொண்டு சென்ற தலைவன் இனிய தன் மார்பில் துயிலுமாறு உள்ளம் மகிழத் தலைவி இருப்பாள் என்பது உணர்த்திற்று.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  The ancient Thamizh people performed both cremations and burials in large clay urns.  There are references to clay urns in Akanānūru, Pathitruppathu and Puranānūru.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:  இரும் – dark, big, புனிற்று எருமை – buffalo that just gave birth, பெருஞ்செவிக் குழவி – big-eared calf, பைந்தாது எருவின் – with fresh pollen dust, with fresh cow dung dust, with fresh dust, வைகு துயில் மடியும் – stays and sleeps, செழுந்தண் – flourishing cool, மனையோடு – with our house, எம் – our, இவண் ஒழிய – left from here, செல் பெருங்காளை – strong young man who left, பொய்ம் மருண்டு – confused by lies, சேய் நாட்டு – distant country, சுவைக் காய் நெல்லி – tasty nelli fruits, Phyllanthus emblica, போக்கு – while going, அரும் – rare, பொங்கர் – grove, வீழ் கடைத் திரள் காய் – gooseberries that are rounded on the sides that fell down, ஒருங்குடன் தின்று – ate in full, வீ சுனை – dried spring, dried pond, சிறு நீர் – little water, குடியினள் – she drank, கழிந்த – went, குவளை – blue waterlilies, உண்கண் – kohl-rimmed eyes, என் மகள் ஓரன்ன – like my daughter, செய் – red, போழ் – tender palm frond, வெட்டிய – cut, பொய்தல் ஆயம் – with friends who play with her, poythal games, மாலை விரி நிலவில் – at night when moonlight spread, பெயர்பு – went, புறங்காண்டற்கு – to search in the forest, மா – big, இருந்தாழி கவிப்ப – to be covered in a big urn, தா இன்று கழிக – may it perish without strength, எற் கொள்ளாக் கூற்றே – Kootruvan who does not take me, the god of death who does not take me (ஏ – அசைநிலை, an expletive)

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1597
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே.