கிளி, கிள்ளை

நற்றிணை 143, கண்ணகாரன் கொற்றனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஐதே காமம் யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே.

Natrinai 143, Kannakāran Kotranār, Pālai Thinai – What the heroine’s mother
Love is surprising!

Whenever I see her friends play
ōrai games, in the sand brought
and spread in our big mansion yard,
and the nochi tree growing there,
tears roll down my eyes.  More than
me, her parrot also cries, calling her
as though she is its relative.
My young daughter is faultless.
On days when I hear women in our
loud town gossip about her and spread
slander with harsh and sweet words,
I pretend that I don’t understand
them.  I am unable to breathe.

I said to my daughter once,
“Your hair has a fragrant aroma.”

Notes:  தலைவி தலைவனோடு கூடி உடன்போனாள் என்பதை அறிந்த நற்றாய் உரைத்தது.  Ōrai games are played by girls in Natrinai 68, 143, 155 and 398.  இன்னா இன் உரை (8) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இன்னா இன்னுரை என்பது முரண் தொடர்.  அயலார் தலைவியின் களவொழுக்கத்தைப் பழித்தமையால் இன்னா உரை என்றும் களவும் ஓர் அறநெறியே ஆதலால் இனிய உரை என்றும் தாய் கருதினாள்.  நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே (10) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவன் வேற்றுப் புலத்தான்.  அவன் தந்த பூவும் தம் நிலத்திற்குரியது அன்று. எனவே பூ வேறுபாட்டினைத் தாய் உணர்ந்தாள்.  – ஐ வியப்பாகும் (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  ஐதே காமம் – love is surprising/ beautiful/delicate, யானே – me, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), தருமணல் ஞெமிரிய – new sand brought and spread, திரு நகர் முற்றத்து – in the yard of the rich house, ஓரை ஆயமும் – the friends who play ōrai games and, நொச்சியும் – and the nochi tree, Vitex leucoxylon, Chaste tree, காண்தொறும் – whenever I see them, நீர் வார் கண்ணேன் – tears dripping from my eyes, கலுழும் என்னினும் – more than me who is crying, கிள்ளையும் – also our parrot, கிளை எனக் கூஉம் – keeps calling thinking she is its relative (கூஉம் – இன்னிசை அளபெடை), இளையோள் வழு இலள் – the young girl has not have a fault, அம்ம – இரக்கக் குறிப்பு, signifying pity, அசை நிலை,  an expletive, தானே – தான், ஏ – அசை நிலைகள், expletives, குழீஇ – together (சொல்லிசை அளபெடை), அம்பல் மூதூர் – loud/gossiping town, அலர்வாய்ப் பெண்டிர் – slander-spreading women, இன்னா இன் உரை கேட்ட – when I heard the harsh and kind words, சில் நாள் – few days, அறியேன் போல – I pretended like I don’t hear them, உயிரேன் – I am unable to breathe, நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – I told her (my daughter) that her hair smelled fragrant (ஏ – அசை நிலை, an expletive)

அகநானூறு 369, நக்கீரர், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கண்டிசின் மகளே கெழீஇ இயைவு எனை
ஒண் தொடி செறித்த முன் கை ஊழ்கொள்பு
மங்கையர் பல பாராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சேய் இழை மகளிர் ஆயமும் அயரா
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர்
பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
எற் புலந்து அழிந்தனளாகித் தன் தகக்
கடல் அம் தானைக் கை வண் சோழர்
கெடல் அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர்ப் புதுவது புனைந்து
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக் காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத்தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல் என நோவல் யானே.

அகநானூறு 49, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன் நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன் கழிதல் அறியின் தந்தை
அல்கு பதம் மிகுந்த கடியுடை வியன் நகர்
செல்வுழிச் செல்வுழி மெய்ந் நிழல் போல
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடு வழி ஆடு வழி அகலேன் மன்னே.

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 549
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயற் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வரக் கூவாய்!

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 625
கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்
ஊட்டக்கொடாது செறுப்பனாகில் உலகளந்தானென்று உயரக்கூவும்
நாட்டில் தலைப்பழியெய்தி உங்கள் நன்மையிழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்!

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3519
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யும் கொலோ?