கிண்கிணி – கொலுசு, சலங்கை

குறுந்தொகை 148, இளங்கீரந்தையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வச் சிறாஅர் சிறு அடி பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம் வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின்
கனவோ மற்றிது வினவுவல் யானே.

Kurunthokai 148, Ilankeeranthaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
In this cold season, kuruntham
trees sway along with kondrai
trees that have put out buds looking
like shining bells with open ends
resembling the gaping mouths
of frogs, strung on the bright, gold
anklets worn by wealthy children on
their small feet.

If you tell me that this is not the rainy
season, I have to ask you whether you
are dreaming.

Notes:  The heroine was worried on seeing signs of the rainy season.  Her friend assured her that this was not the rainy season.  The heroine responded with these words.  பருவங்கண்டு வருந்திய தலைவியிடம் ‘இது பருவம் அன்று’ எனத் தோழி கூற, ‘இது கார்ப்பருவம் தான்’ எனத் தலைவி கூறியது.  கலித்தொகை 86 – தேரைவாய்க் கிண்கிணி.

Meanings:  செல்வச் சிறாஅர் – rich children (சிறாஅர் – இசைநிறை அளபெடை), சீறடி பொலிந்த – shining on their small feet, beautiful on their small feet, தவளை வாய – like the mouths of frogs, பொலஞ்செய் கிண்கிணி – anklets made with gold, காசின் அன்ன – like the anklet bells (காசின் – காசு, இன் சாரியை),  போது ஈன் கொன்றை – kondrai trees that have put out buds, சரக்கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, குருந்தோடு – with wild orange, citrus indica, அலம்வரும் – whirls, sways, பெருந்தண் காலையும் – even in the cold season, கார் அன்று என்றி ஆயின் – if you say that this is not the rainy season (என்றி – முன்னிலை ஒருமை), கனவோ இது – is this a dream (ஓகாரம் வினா), மற்று – அசைநிலை, an expletive, வினவுவல் – I am asking, I am questioning, தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

நற்றிணை 269, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன்
மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய
அவ் எயிறு ஒழுகிய அவ்வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி  5
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே.

Natrinai 269, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Her son who drinks milk with his
red mouth, who wears big gold
anklets with gems the size of tiny
coconuts, crawls down from her
chest adorned with a flower garland.
She smiles with her lovely teeth,
the woman of faultless principles.

Oh lord!  The distressed eyes on your
beloved’s pretty face are not able to tie
you to her, like valli yam vines that are
used as ties, preventing you from
leaving.

Who knows what those who cross many
small mountains think?

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுத்தது.  பொருள்வயின் பிரியக் கருதும் தலைவனை செலவு அழுங்கச் செய்ததுமாம்.

Meanings:  குரும்பை – tiny coconuts, tiny palmyra fruits, மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணி – big fine red anklets with gems, பால் ஆர் – milk drinking, துவர் வாய் – red mouth, coral-like red mouth, பைம் பூண் புதல்வன் – son with new jewels, மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய – crawl down from her chest with garlands, அவ்வெயிறு ஒழுகிய – flowing from her beautiful teeth, வெவ்வாய் – desirable, மாண் நகை – esteemed smile, செயிர் தீர் கொள்கை – faultless principles, நம் உயிர் வெங்காதலி – your beloved lover who is as precious as life, திருமுகத்து – on her beautiful face, அலமரும் கண் இனைந்து – her swirling eyes are sad, அல்கலும் – every day, பெரும – oh greatness, வள்ளியின் பிணிக்கும் – tying like with valli yam vines (வள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), என்னார் – they do not consider, சிறு பல் குன்றம் இறப்போர் – those who will go past many small mountains, அறிவார் யார் – who knows, அவர் முன்னியவ்வே – what they are thinking (விரிக்கும் வழி விரித்தல், ஏ – அசைநிலை, an expletive)

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 97
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி
தன்னியல் ஓசை சலன் சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கு ஒட்டரா அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ!

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 109
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்.

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 137
ஓட ஓடக் கிண்கிணிகள்
ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடி ஒடிப் போய்விடாதே
உத்தமா! நீ முலை உணாயே!

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 140
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே! திரியை
எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனகக் கடிப்பும் இவையாம்!

ஆண்டாளின் திருப்பாவை, திவ்ய பிரபந்தம் 495
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தார் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!