களிற்று யானையின் அன்பு
குறுந்தொகை 37, சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.
Kurunthokai 37, Chēra king Pālai Padiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend!
His love for you is great;
he will be good to you.
In the path he took,
a big-trunked male elephant
strips the barks of delicate
branches of yā trees
to feed his hungry mate.
Notes: The heroine’s friend said this to the heroine who was sad since the hero was away. தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி கூறியது. குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும். இறைச்சி: தமிழண்ணல் உரை – ஆண் யானை பிடியின் பசியை நீக்கும் காட்சி தலைவனது விருப்பத்தைத் தூண்டி, அவனை விரைவில் திரும்ப வைக்கும் எனும் இது இறைச்சி எனப்படும்.
Meanings: நசை பெரிது உடையர் – he has great love for you, நல்கலும் நல்குவர் – he will shower his graces on you, பிடி – female elephant, பசி களைஇய – to remove hunger (களைஇய – சொல்லிசை அளபெடை), பெருங்கை வேழம் – a male elephant with big trunk, மென் சினை – delicate branches, யாஅம் – of yā trees, ஆச்சா மரம், Hardwickia binate (இசைநிறை அளபெடை), பொளிக்கும் – strips the barks, அன்பின – it has love, தோழி – O friend, அவர் சென்ற ஆறு – the way he went, ஏ – அசைநிலை, an expletive
திவ்ய பிரபந்தம் 1770, இரண்டாம் திருவந்தாதி 75, பூதத்தாழ்வார்
பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று,
இரு கண் இள மூங்கில் வாங்கி, அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்,
வான் கலந்த வண்ணன் வரை.