ஒரு மகள் உடையேன் – தலைவியின் தாய் வருந்திச் சொன்னது

நற்றிணை 184, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலையின் தாய் சொன்னது
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே ‘தாங்கு நின் அவலம்’ என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ, அறிவுடையீரே?  5
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

Natrinai 184, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
I am a mother who has borne just one
daughter!

Yesterday she left with a battle-skilled,
strong, young man with a sharp spear,
to cross the harsh wastelands and
the huge mountains.

Oh wise men!  You ask me to bear
my sorrow.  How can I do that, when
I think of my pretty daughter whose walk
is as though the pupils of kohl-rimmed
eyes have learned to walk, and when I see
the nochi trees with sapphire-like flowers
under which she played and our empty
veranda? My heart aches!

Notes:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின் நற்றாய் வருந்தி உரைக்கின்றாள்.  ஒளவை துரைசாமி உரை – தன்னும் அவனும் அவளும் (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என்னும் நூற்பாவின்கண் ‘அவ்வழியாகிய கிழவிகளுட் சில வருமாறு’ என உரைத்து, இப்பாட்டை எடுத்தோதி, இந்நற்றிணை தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இனிப் பேராசிரியர் ‘வினைப் பயன் மெய்யுரு’ (தொல்காப்பியம், உவமயியல் 1) என்னும் நூற்பாஉரையில் ‘மணிவாழ் வினையெச்சம் தன்னெச்சவினை இகந்ததாயினும் அஃது உவமப்பகுதியாகலான் வருதலும் கொள்ளப்படும்’ என்பர்.   நற்றிணை 184 – மணி ஏர் நொச்சி, நற்றிணை 293 – மணிக் குரல் நொச்சி.  மணி வாழ் பாவை நடை கற்றன்ன (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவளதருமை கூறுவாள் கண்மணியுள் வாழ் பாவையை யுவமித்தாள், ஒளவை துரைசாமி உரை – கண்ணிற் பாவை, மகளாகிய பாவை போல நடையுடைய தன்மையின் நடைகற்றன என்றாள்.

Meanings:  ஒரு மகள் உடையேன் – I have only one daughter, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, அவளும் – she, செரு மிகு மொய்ம்பின் – with strength in fighting, skilled in battle, கூர்வேல் காளையொடு – with a young man with sharp spear, பெருமலை – huge mountains, அருஞ்சுரம் – harsh wasteland, நெருநல் சென்றனள் – she went yesterday, இனியே – now – (ஏ – அசைநிலை, an expletive), தாங்கு நின் அவலம் என்றிர் – you ask me how I bear the pain, அது – that, மற்று – அசைநிலை, an expletive, யாங்ஙனம் ஒல்லுமோ – how can I tolerate it (ஓ – அசைநிலை, an expletive), அறிவுடையீரே – oh intelligent people (ஏ – அசைநிலை, an expletive), உள்ளின் உள்ளம் வேமே – my heart aches when I think about it (ஏ – அசைநிலை, an expletive), உண்கண் – kohl-rimmed eyes, மணி வாழ் பாவை – pupils of the eyes, image in the pupils of the eyes, நடை கற்றன்ன – like they learned to walk, என் அணி இயற் குறுமகள் ஆடிய – my pretty young girl played, மணி ஏர் நொச்சியும் – nochi tree with sapphire gem like flowers (ஏர் – உவம உருபு, a comparison word), Vitex leucoxylon, Chaste tree, water peacock’s foot tree, தெற்றியும் கண்டே – on seeing the veranda (ஏ – அசைநிலை, an expletive)

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 300 – தலைவியின் தாய் சொன்னது
ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்,
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை,
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப்புறம் செய்யுங் கொலோ.