ஐமார்
ஐமார்
ஐ வியப்பாகும் (தொல்காப்பியம் உரியியல் 80)
ஐ என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்தவை ஐயா, ஐயர், ஐயன்மார்
வியந்து பாராட்டத்தக்கச் சிறப்புடையவர்களை ஐயர் என்று
அழைப்பது பண்டைய தமிழரின் மரபு.
ஐய – ஐயா, sir, a term of respect
ஐ – அண்ணன், தலைவன், தந்தை
ஐயர் – அண்ணன்மார், பெரியோர், தந்தையர்
ஐங்குறுநூறு 332, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பில் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல்
செல்லல் ஐய என்னாதவ்வே.
Ainkurunūru 332, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Listen! The animal herds of the
forest with lovely, tall mountains
have no virtue for sure.
They did not tell him, “Sir! It is harsh
to separate from your lover. Do not
leave her.”
Notes: The hero has gone to earn wealth. The heroine is sad. She complains about the animals on his path. இலக்கணக் குறிப்பு: அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, வாழி – அசை நிலை, an expletive, என்னதூஉம் – இன்னிசை அளபெடை, அறன் – அறம் என்பதன் போலி, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, தாமே – தாம், ஏ அசை நிலைகள், expletives, கானத்த – கானம் என்னும் பெயெரடியாக வந்த பெயரெச்சக்குறிப்பு, கொடிதே – ஏகாரம் அசை நிலை, an expletive, தேற்றம், certainty, செல்லல் – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, அவ்வே – ஏகாரம் அசை நிலை, an expletive. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).
Meanings: அம்ம – listen to me, வாழி – may you live long, தோழி – oh friend, என்னதூஉம் – even a little bit, அறன் இல மன்ற தாமே – they certainly have no sense of fairness (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), they are certainly not just, விறல் – victorious, splendid, மிசை – above, குன்று கெழு – with mountains, கானத்த – in the forests, பண்பு இல் – without good traits, மாக் கணம் – herds of animals, கொடிதே – it is harsh, காதலிப் பிரிதல் செல்லல் – do not go abandoning your lover, ஐய – sir, என்னாது அவ்வே – they do not say
குறுந்தொகை 123, ஐயூர் முடவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே.
Kurunthokai 123, Aiyūr Mudavanār, Neythal Thinai – What the heroine’s friend said to her as the hero listened nearby
On one side of the white sand
that appears like heaped up
moonlight, is the beautiful,
lonely grove with punnai trees with
black branches, their damp, cool
shade appearing like it is filled with
darkness.
He has not yet come, but our brothers
will return in their boats with the many
fish that they catch.
Notes: The heroine who did not see the hero since he missed their day tryst, said this to her friend, aware that the hero was nearby. பகற்குறியிடத்து வந்த தலைவனைக் காணாத தோழி, அவன் இருப்பதை அறிந்து தலைவியிடம் சொன்னது. புலம்ப (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தனிப்ப, தனிமைப் பட்டிருப்ப, தலைவன் வாராமையால் பொழில் தனிமையுடையதாயிற்று. நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல். புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).
Meanings: இருள் திணிந்தன்ன – like darkness was filled, ஈர்ந்தண் கொழு நிழல் – damp cool thick shade, நிலவுக் குவித்தன்ன – like the moon light heaped, வெண்மணல் – white sand, ஒரு சிறை – on one side, கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப – lonely beautiful grove with punnai trees with black branches, lonely grove with flowers and laurel trees with black branches, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இன்னும் வாரார் – he has not yet come, வரூஉம் பன் மீன் வேட்டத்து – will return after catching many fish (வரூஉம் – இன்னிசை அளபெடை), என் ஐயர் திமில் – the boats of our brothers, ஏ – ஈற்றசை
குறுந்தொகை 139, ஒக்கூர் மாசாத்தியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மனை உறை கோழிக் குறுங்கால் பேடை
வேலி வெருகின மாலை உற்றெனப்
புகும் இடம் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தாங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐய எம் தெருவே.
Kurunthokai 139, Okkūr Māsāthiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Sir! May you live long! Do not
come to our street with distressing
slander and gossip,
that sound like the calls of the
short-legged, house-dwelling hen
to her distressed chicks,
when darkness sets in and wild cats
linger near fences looking for
openings.
Notes: The heroine’s friend refused entry to the hero who returned from his concubine. பரத்தையர் இல்லத்திற்குச் சென்ற தலைவன் வாயில் வேண்டிப் புக்க அவனுக்குத் தோழி வாயில் மறுத்தது. புறநானூறு 326 – ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டரற்ற. உ. வே. சாமிநாதையர் உரை – தன்னால் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை வெருகு கவருமோ என்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினர் என்பது. வெருகினம் (2) – தலைவன் பாணரும் இளைஞரும் சூழ வருகின்றான் ஆகலின், வெருகினம் என்றாள். வாழியர் (6) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – செற்றத்தால் வாழியர் என்றாள். பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).
Meanings: மனை உறை கோழி – house-residing hen, குறுங்கால் பேடை – short legged female, வேலி – fence, வெருகு இனம் – many wild cats, மாலை உற்றென – since it was evening time, புகும் இடம் அறியாது – not knowing a place to enter, தொகுபுடன் குழீஇய – group joins together (குழீஇய – செய்யுளிசை அளபெடை), பைதல் பிள்ளை – distressed young chicks, கிளை – family, பயிர்ந்தாஅங்கு – like how it calls (இசை நிறை அளபெடை), இன்னாது இசைக்கும் – uttering words that cause distress, அம்பலொடு – with blame , with slander, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் – may you live long, ஐய – sir, எம் தெரு – to our street, ஏ – அசைநிலை, an expletive
நற்றிணை 122, செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்று கொல் யாது கொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே.
Natrinai 122, Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Oh friend with flower-like eyes!
The red millet plants with dark stems,
that my brothers raised in the mountain
slopes, have been harvested.
The valley near our flourishing village
surrounded by mountains and forests,
is filled with buds of wild jasmine.
Not revealing to others, but with a firm
mind, mother has been trying to find out
about the lord of the mountains who
comes here to see you in fierce darkness
when roaring thunder strikes.
Wondering whether it is true, or whether
it is not true, or whether it is something
else, she has put up a stiff face.
You need to think about this and act
accordingly!
Notes: தலைவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ள வேண்டும் எனும் கருத்தில் தோழி கூறியது. ஆடி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடி என்பது ஒற்றாடி, அஃதாவது ஒற்றறிய முயன்று என்றபடியாம். மறைந்தவை ஆடி (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மறைந்து அவை ஆடி, அயலார்க்கு தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு, ஒளவை துரைசாமி உரை – மறைந்தவை நாடி, களவின்கண் நிகழ்ந்ததை ஆராய்ந்து அறிந்து. அன்னை (9) – ஒளவை துரைசாமி உரை – அன்னையென்றது ஈண்டுச் செவிலியை. ‘ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலியாகும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவு 112). நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69). அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122-9 – அன்னையும் அமரா முகத்தினள்.
Meanings: இருங்கல் – big mountain, அடுக்கத்து – in the mountain slopes, என் ஐயர் – my brothers, உழுத – plowed and planted, plowed and seeded, கருங்கால் – stems with dark color, செந்தினை – red millet, கடியும் உண்டென – have been plucked (கடிதல் – கொய்தல்), கல்லக – in the mountains, வரைப்பில் – within the boundaries, கான் கெழு – with forests, சிறுகுடி – small settlement, small village, மெல் அவல் மருங்கின் – near the valley, மௌவலும் அரும்பின – wild jasmine vines have put put buds, நரை – proud, உரும் உரறும் – loud thunder sounds, நாம நள் இருள் – fearsome pitch darkness (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), வரையக நாடன் – the lord of the mountains, வரூஉம் என்பது – that he comes (வரூஉம் – இன்னிசை அளபெடை), உண்டு கொல் – is it true, அன்று கொல் – is it not true, யாது கொல் – is it something else, மற்று – அசைநிலை, an expletive, என நின்று – about what was happening, மதிவல் உள்ளமொடு – with an intelligent strong mind, மறைந்து அவை ஆடி – hiding it from others and talking about it, hiding from others and trying to find about it, அன்னையும் அமரா முகத்தினள் – mother is with a stiff face, mother is with a harsh face, நின்னொடு – with your mind, நீயே சூழ்தல் வேண்டும் – you need to analyze this, பூ ஏய் கண்ணி – oh young woman with flower-like eyes, அது பொருந்துமாறே – பொருந்தும் ஆறு, பொருந்தும் வழி, that is fitting thing to do, that is the proper thing to do (ஏ – அசைநிலை, an expletive)
நற்றிணை 127, சீத்தலைச் சாத்தனார், நெய்தற் திணை – தோழி பாணனிடம் சொன்னது
இருங்கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர் கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே.
Natrinai 127, Seethalai Sāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the messenger bard
What is the use, oh bard,
if he comes to our seaside village
which gets cooled by the sprays
that storks shake off their
wet backs, as they search for prey
in the vast backwaters?
Her uneducated, angry brothers
live in their wealthy house where
they eat fatty fish.
The naive young woman places her
doll on her head, the one she used
to play with her friends
in the past when they built sand
houses. “Let’s go and play in the
groves, even without the lord of
the delicate shores,” she says.
Notes: நெய்தலுள் மருதம். தோழி பாணற்கு வாயில் மறுத்தது. உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழி துழைஇய நாரை தன் ஈர்ம்புறத்து இறகை எறிதலால் தெறிக்கும் திவலையால் எம் பாக்கம் குளிர்மிக்கு நடுங்கும் என்றதனால், பரத்தையர் சேரிக்கண் மகளிர் நலம் நயத்தொழுகும் எழும் அலர் ஊரெங்கும் பரந்து எம்மை நாணால் நடுங்கச் செய்தது என்பது. ஈனாப் பாவை – வெளிப்படை, பெறாத குழந்தையாகிய விளையாட்டுப் பாவை.
Meanings: இருங்கழி துழைஇய – searching in the dark/vast backwaters (துழைஇய – செய்யுளிசை அளபெடை), ஈர்ம் புற நாரை – storks with wet backs, storks with wet sides, white stork – Ciconia ciconia, or pelican or crane, இற எறி திவலையின் – due to the water sprays that they throw off their feathers, பனிக்கும் பாக்கத்து – to our seashore village which gets cold, to our seashore village which trembles, உவன் வரின் எவனோ – what is the use if he comes here (ஓ – அசைநிலை), பாண – oh bard, பேதை – the naive girl, கொழு மீன் ஆர்கை – eating fatty fish, செழு நகர் நிறைந்த – in the rich house, கல்லாக் கதவர் – those who are uneducated and angry, தன் ஐயர் ஆகவும் – who are her brothers, வண்டல் ஆயமொடு – with friends building little sand houses, பண்டு தான் ஆடிய – in the past she played, ஈனாப் பாவை – her doll which is a child she did not bear (பெறாத குழந்தையாகிய விளையாட்டுப் பாவை, வண்டற் பாவை, வெளிப்படை), தலையிட்டு – placed it on her head, ஓரும் – அசைநிலை, an expletive, மெல்லம்புலம்பன் – the lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), அன்றியும் செல்வாம் என்னும் கானலானே – let us go to play in the seashore groves even without him (ஏ – அசைநிலை, an expletive)
அகநானூறு 126, நக்கீரர், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நினவாய் செத்து நீ பல உள்ளிப்
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங்கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடு நாள் போகித் தன் ஐயர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு
அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயங் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச்
சிறிய மிழற்றும் செவ்வாய்ப் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங் கெழு நெஞ்சே.
Akanānūru 126, Nakkeerar, Marutham Thinai – What the hero said to his heart
Oh naive heart that stands there without
letting go, behind the young woman with
a red mouth that prattles gently like a
parrot, kohl-rimmed, calm eyes like carps,
thick, five-part braid that falls low on her
back looking like dark clouds and
a lightning-like waist!
Thinking that words are true, you have
suffered greatly and struggled with pain.
You will be ruined like Anni,
who desired Thithiyan’s punnai tree
with clusters of fragrant, golden flowers,
and could not be controlled by the good
words of his friend Evvi owning an army
with spears and towns with fine jewels
and pearls as big as kazhangu seeds,
that a bard’s daughter of fine words and
curved, beautiful navel, barters and gets
instead of red rice, on the streets with tall,
swaying flags, for thick-finned vālai fish,
brought by her brothers at dawn leaving
at midnight muddying the estuary of the
mighty Kāviri river with long sand bars with
fine sand, that reduces the ocean’s shores.
Huge, fresh flowers on the shore flourish in
the flood waters which started on the
mountains.
Notes: (1) – கற்புக்காலத்தே தலைவி தலைவனுடன் ஊடியிருந்தாள். அவன் பணிமொழி கூறி இரந்தும் அவள் தேற்றாளாய்ப் பின்னும் ஊடினாள். அவன் தன் நெஞ்சிடம் வருந்திக் கூறியது. (2) – தலைவன் குறியிடத்தே சென்றான். அங்கு அக்குறி பிழைத்தமையால் தன் நெஞ்சிடம் கூறியது. (3) தலைவன் தோழியிடம் தலைவியை கூட்டுவிக்க வேண்டித்தாழ்ந்து பணிந்து நின்றான். அந்நிலையில் தலைவியை நினைந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. வரலாறு: எவ்வி, திதியன், அன்னி, காவிரி. Natrinai 180 and Akanānūru 45 and 145 have references to Anni cutting down Thithiyan’s tree in the Kurukkai battle. There are references to Anni Mignili in Akanānūru 196 and 262. There are references to Anni in Natrinai 180 and Akanānūru 45, 126 and 145. Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414. அமர்த்த உண்கண் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்டோர் நெஞ்சைப் பருகுகின்ற பெரிய கண்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒன்றையொன்று பொருதும் மையிட்ட கண்கள். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).
Meanings: நின – your, வாய் செத்து – thinking words are true, நீ பல உள்ளி – you have thought a lot, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – you are not just feeling greatly sad and distressed, மலை மிசைத் தொடுத்த – continuing from the mountains, starting in the mountains, மலிந்து செலல் நீத்தம் – abundantly flowing floods (செலல் – இடைக்குறை), தலைநாள் மா மலர் – day’s new dark/huge flowers, தண் துறைத் தயங்க – splendid on the cool shore, கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று – of the huge river Kāviri that reduces the ocean shores (மெலிக்கும் = கரைக்கும்), அறல் – fine sand, வார் நெடுங்கயத்து கலங்க – the long estuary’s water to get muddied, அரு நிலை – difficult time/situation, மால் இருள் நடுநாள் போகி – going during pitch dark midnight time, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு – for the vālai fish with thick back ridge fins that her brothers brought in the morning, Trichiurus haumela, அவ் வாங்கு உந்தி – pretty curved navel, அம் சொல் பாண்மகள் – the bard’s daughter with beautiful words, நெடுங்கொடி நுடங்கு – tall flags swaying, நறவு மலி மறுகில் – on the streets selling abundant alochol, பழஞ்செந்நெல்லின் – of old red rice, of old fine rice, முகவை கொள்ளாள் – she does not agree to the measure, கழங்கு உறழ் முத்தமொடு – with pearls that look like molucca beans, Caesalpinia crista seeds (உறழ் – உவம உருபு, a comparison word), நன்கலம் பெறூஉம் – she gets fine jewels (பெறூஉம் – இன்னிசை அளபெடை), பயம் கெழு வைப்பின் – with towns that yield benefits, பல் வேல் எவ்வி – Evvi with many spears, நயம் புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் – he does not submit ever with kind just good words, பொன் இணர் நறுமலர் – gold-colored clusters of fragrant flowers, புன்னை வெஃகி – desired the punnai tree, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, திதியனொடு பொருத அன்னி போல – like Anni who fought with Thithiyan, விளிகுவை – you will be ruined, you will die, கொல்லோ – கொல், ஓ அசைநிலைகள், expletives, நீயே – you, கிளியெனச் சிறிய மிழற்றும் செவ்வாய் – red mouth that prattles like a parrot (செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), கயல் என அமர்த்த உண்கண் – kohl-lined calm eyes that are like carp fish, carp-like kohl-lined eyes that are in strife with each other, புயல் என – like clouds (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), புறம் தாழ்பு – hanging low on her back, இருளிய – dark, black, பிறங்கு – bright, flourishing, குரல் – cluster, ஐம்பால் – five-part braid , மின் நேர் மருங்குல் குறுமகள் – the young woman with a lightning like waist, பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – my ignorance-filled heart that does not let go of standing behind her (விடாஅ – இசைநிறை அளபெடை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)
அகநானூறு 240, எழூஉப்பன்றி நாகன் குமரனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப
இனிப் புலம் பின்றே கானலும் நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பன்மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே அந்தில்
அணங்குடைப் பனித் துறை கை தொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திருநுதல் நீவிக்
கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து
இன்துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்ப்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.
Akanānūru 240, EzhooUppandri Nākan Kumaranār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Thinking about its lonely child on a big branch
of a dark-trunked gnāzhal tree with red flowers,
a low-flying stork flies away from the vast backwaters
with sapphire-like blue waterlilies. The seashore
grove is empty.
Our father goes at night to show my brothers the
abundant fish he caught with the light in the sturdy
boat that braves the ocean with waves.
Mother and her friends worship with their palms
pressed together, and praise the gods on the cold shores.
If you desire to stroke the pretty brow of the woman
with honey-flowing hair, and sleep on her chest with
pointed breasts that are like kōngam buds, come during
the day to the cool, lovely seashore grove with white sands
where cherunthi flowers are opened by bees.
Notes: தலைவனுக்கு இரவுக்குறியின் ஏதம் காட்டி, இனி நீ இரவில் வருவது ஒழி என்பதுபடப் பகற்குறி இடம் கூறியது என்றவாறு. கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. என் ஐயர் காட்டிய (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – என் அண்ணன்மார்க்குக் காட்டுவதற்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அண்ணன்மார்க்குக் காட்டிய. அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).
Meanings: செவ்வீ ஞாழல் – red gnāzhal flowers, Cassia sophera , Tigerclaw tree, புலிநகக்கொன்றை (செவ் வீ – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), கருங்கோட்டு – dark trunk, இருஞ்சினை – big branch, தனிப் பார்ப்பு உள்ளிய – thinking about its lonely child, தண் பறை நாரை – stork/crane/pelican that flies low, மணிப் பூ நெய்தல் – sapphire colored bluelilies, Nymphaea caerulea, மாக் கழி – huge/dark backwaters, நிவப்ப – rises up, flies, இனிப் புலம்பின்றே கானலும் – the seashore grove is empty, நளி கடல் திரைச் சுரம் உழந்த – caught in the difficult waves in the dense/vast ocean, திண் திமில் விளக்கில் – in the light of the sturdy boat, பன் மீன் கூட்டம் – lots of fish, என் ஐயர் – my brothers, காட்டிய – to show, showed, எந்தையும் செல்லுமார் இரவே – our father goes at night, அந்தில் – அசைநிலை, அணங்குடைப் பனித் துறை – cold shores with gods, கைதொழுது ஏத்தி – worshipped with her hands held together and praised, யாயும் ஆயமோடு – mother along with her friends, அயரும் – she prays, நீயும் – you, தேம் பாய் ஓதி – the woman with honey flowing hair , (தேம் பாய் ஓதி – அன்மொழித்தொகை, தேம் – தேன் என்றதன் திரிபு), திரு நுதல் – beautiful forehead, நீவி – stroke, கோங்கு முகைத்தன்ன குவி முலை – pointed breasts that are like kongam buds, Cochlospermum gossypium, ஆகத்து இன் துயில் அமர்ந்தனை ஆயின் – if you desire sweet sleep on her chest, வண்டு பட விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர் – in the small space with white sands where cherunthi flowers have been opened by swarming bees, Ochna squarrosa, Panicled golden-blossomed pear tree, பூ வேய் புன்னை – punnai trees with flowers, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, அம் தண் பொழில் வாவே – come to the beautiful cool grove, தெய்ய -அசைநிலை, an expletive, மணந்தனை செலற்கே – to unite with her and leave (செலற்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)
கலித்தொகை 107, தலைவியும் தோழியும் சொன்னது
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம்
கொல் ஏறு கோடல் குறை எனக் கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
தொழுவத்து
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
அதனைக் கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது
கேட்டனள் என்பவோ யாய்
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா
அவன் கண்ணி அன்றோ அது
பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல் ஆகுமோ மற்று
எல்லாத் தவறும் அறும்
ஓஒ அஃது அறும் ஆறு
ஆயர் மகன் ஆயின் ஆய மகள் நீ ஆயின்
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்
அன்னை நோதக்கதோ இல்லை மன் நின் நெஞ்சம்
அன்னை நெஞ்சு ஆகப் பெறின்
அன்னையோ
ஆயர் மகனையும் காதலை கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத்
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.
Kalithokai 107, Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said
Heroine:
Hey my friend! Our herders have let out
their murderous bulls into the rodeo
arena, declaring to the goat herders roaming
in their village, and to the cow herders who
point out information about their milking cows,
stating that they are ready for capturing.
When a young man seized a mean, tawny bull
with markings on its ears, the curved strand with
pointed mullai flowers that decorated his head
was thrown off when the stupid bull removed it
with its horns and leaped. The strand landed on
my hair. Excited like those who got back what
they lost, I tied it to my hair. Will others ask
whether my mother asked me about it?
Tell me how to handle this!
Friend:
If she asks, what are you to do? Besides, isn’t it a
flower strand that belonged to him?
Heroine:
Is there anything I can do if mother asks me why I
have a garland belonging to a stranger in my hair
which did not have flowers?
Friend:
All difficulties will end.
Heroine:
O! O! How will it end?
Friend:
If he is a herder’s son, you are a herder’s daughter.
If he desires you, you desire him. There should not
be anything for your mother to worry about.
Heroine:
I wish my mother had a heart like yours!
Friend:
Are you of that nature? You love the herder’s son
greatly. You also fear your mother. If so, it would
be difficult to find a cure for your disease.
Heroine:
If there is no medicine for my disease, won’t I be
distressed, my friend?
Friend:
Do not feel sad! On hearing that a bull had given you
a garland for your washed, perfect hair, your father
and brothers thought it was a firm sign from Thirumāl,
and have consented to give you in marriage to the
herder.
Meanings: தலைவி: எல்லா – hey you, இஃது ஒன்று கூறு – saying in this manner, குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் – and goat herders who roam in their village, குடம் சுட்டவர்க்கும் – and cow herders who point out information about their milking cows, எம் கொல் ஏறு கோடல் குறை என – our murderous bulls are ready for capturing, கோவினத்தார் – cow herders, பல் ஏறு பெய்தார் தொழூஉ – they let many bulls into the arena (தொழூஉ – இன்னிசை அளபெடை), தொழுவத்து – in the stable, சில்லைச் செவி மறைக் கொண்டவன் – the man who took on a mean bull holding its ears with markings/dots (மறை – கறை, புள்ளி), சென்னி – head, குவி முல்லை – pointed jasmine flowers, கோட்டம் காழ் – curved garland, கோட்டின் – with the horns, எடுத்துக் கொண்டு ஆட்டிய – took and shook, ஏழை இரும்புகர் பொங்க – as the stupid big tawny colored bull leaped, as the stupid bull with big/black spots leaped (இரும்புகர் – ஆகுபெயர்), அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று – that flower garland came and fell on my hair, மன் – அசைநிலை, an expletive, அதனைக் கெடுத்தது பெற்றார் போல் – excited like those who lost something and got it back, கொண்டு யான் முடித்தது – me tying it on my hair கேட்டனள் என்பவோ யாய் – will others ask whether my mother asked me about it, இஃதொன்று கூறு – tell me how to handle this
தோழி: கேட்டால் – if she asks, எவன் செய்ய வேண்டுமோ – what are you to do (வேண்டுமோ – ஓகாரம் அசை நிலை, an expletive), மற்றிகா அவன் கண்ணி அன்றோ அது – also isn’t it a garland that belonged to him (மற்று + இகா, இகா – ஓர் அசைச் சொல்),
தலைவி: பெய் போது அறியாத் தன் கூழையுள் – in my hair which did not have flowers, ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் செய்வது இல் ஆகுமோ – if mother asks why I have tied a strand that belonged to a stranger what can I do,
தோழி: மற்று எல்லாத் தவறும் அறும் – all difficulties will end,
தலைவி: ஓஒ – வியப்புக்குறி, அஃது அறும் மாறு – O! O! how will it end,
தோழி: ஆயர் மகன் ஆயின் ஆயமகள் நீ ஆயின் – if he is a herder’s son, you are a herder’s daughter, நின் வெய்யன் ஆயின் – if he desires you, அவன் வெய்யை நீ ஆயின் – if you desire him, அன்னை நோதக்கதோ இல்லை மன் – mother should not be upset about anything (மன் – அசை நிலை, an expletive),
தலைவி: நின் நெஞ்சம் அன்னை நெஞ்சு ஆகப் பெறின் – I wish mother had a heart like yours,
தோழி: அன்னையோ – are you of that nature, ஆயர் மகனையும் காதலை கைம்மிக – you love the herder’s son greatly, ஞாயையும் அஞ்சுதி – you are also afraid of mother, ஆயின் – if so, அரிது அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து – it is hard to get a medicine for the disease that you have, (அரோ – அசைநிலை, an expletive),
தலைவி: மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் – if there is no medicine for my affliction, எல்லா வருந்துவேன் அல்லனோ யான் – won’t I be just distressed my friend,
தோழி: வருந்தாதி – do not fear (முன்னிலை வினைமுற்று), மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டு – on hearing that the bull gave his garland on your hair that is washed perfectly, திண்ணிதாத் தெய்வ மால் காட்டிற்று இவட்கு என – thinking that divine Thirumāl showed firmly this sign for you, நின்னை – you, அப் பொய் இல் பொதுவற்கு கொடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு – your father and brothers together have considered and agreed to give you to that honest herder
புறநானூறு 85, பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி, திணை: கைக்கிளை, துறை: பழிச்சுதல்
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடுஆடு என்ப ஒரு சாரோரே
ஆடன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இரு நன் மொழியே
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே.
Puranānūru 85, Poet Perunkōzhi Nāykan Makal Nakkannaiyār sang for Chozhan Poravaikko Perunarkilli, Thinai: Kaikkilai, Thurai: Palichuthal
Since this is not the town of my lord,
and since this is not the country of my lord,
one group says, “Victory, Victory!”
Another group says, “No victory for him.”
Two fine voices by many good people!
I ran to my house, my lovely anklets jingling,
leaned on a palmyra tree with trunk like
a drum, and saw that victory was his!
Notes: The poet Nakkannaiyār fell in love with Chozhan Poravaikko Perunarkilli who was a great warrior. The background of poems 83, 84 and 85 is the king battling with a warrior in Āmur town. This poet wrote Puranānūru poems 83, 84 and 85. The later Muthollāyiram and ulā poems where young girls fall in love with kings might have been based on these poems. Puranānūru 80, 81, 82, 83, 84 and 85 were written for this king. நல்ல (5) – உ. வே. சாமிநாதையர் உரை – இகழ்ச்சிக்குறிப்பு. என்னை, என் ஐ – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).
Meanings: என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – since this is not the town of my lord, என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – since this is not the country of my lord, ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே – one group says ‘victory, victory’, ஆடன்று என்ப ஒரு சாரோரே – one group says that he will not win (சாரோரே – ஏகாரம் அசைநிலை, an expletive), நல்ல பல்லோர் இரு நன் மொழியே – two fine voices by many good people (மொழியே – ஏகாரம் அசைநிலை, an expletive), அம் சிலம்பு ஒலிப்ப – as my beautiful anklets jingled, ஓடி எம் இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று – I ran and came to my house and leaned on the palmyra tree with drum-like trunk, Borassus flabellifer, யான் கண்டனன் – I saw, அவன் ஆடாகுதலே – that victory became his (ஆடாகுதலே – ஏகாரம் அசைநிலை, an expletive)
திருமுருகாற்றுப்படை 104-105
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 528
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே,
கோலம் கரிய பிரானே, குருந்திடைக் கூறை பணியாய்!
நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3468
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார்
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே.