இவள் இன்னும் முழு வளர்ச்சி அடையவில்லை

நற்றிணை 201, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
‘மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங்கடிக் காப்பினள்,
சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள்
உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்
செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்  5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு,
அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெருநிலம் கிளரினும், திரு நல உருவின்  10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

Natrinai 201, Paranar, Kurinji Thinai – What the hero said to his friend
You tell me that I should not think about
the mountain dweller’s innocent daughter
who is kept under great protection,
and that she’s too young,
and that she’ll not respond to my words.

Even if strong winds blow and attack,
even if heavy rains pour rapidly,
even if thunder roars,
even if many hindrances arise,
even if the big earth swells up on the tall,
faultless peaks in the western mountains
with white waterfalls and jackfruit trees
with red roots, protected by the benevolent
Kolli Mountain goddess,
the young woman with undying natural
beauty like that of the Kolli goddess will
not leave my heart!

Notes:  கழறிய தோழனுக்குத் தலைவன் உரைத்தது.  வரலாறு:  கொல்லி.  There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  மலை உறை குறவன் – a mountain dweller, காதல் மட மகள் – loving innocent daughter, பெறல் அருங்குரையள் – she is difficult to get (குரை – அசைநிலை, an expletive), அருங்கடிக் காப்பினள் – she is under heavy protection, சொல் எதிர் கொள்ளாள் – she will not respond to your words, இளையள் – she is young, அனையோள் – woman of that nature, உள்ளல் கூடாது – do not think about her, என்றோய் – you said, மற்றும் – வினை மாற்று, உம்மை இசை நிறை, செவ் வேர் – red roots, பலவின் – of jackfruit trees, Artocarpus heterophyllus, பயம் கெழு – benefit yielding, கொல்லித் தெய்வம் – Kolli Mountain goddess, காக்கும் – protects, தீது தீர் – without evil, perfect, நெடுங்கோட்டு – with tall peaks, அவ் வெள் அருவி – lovely white waterfalls, குடவரை அகத்து – in the western mountain ranges, கால் பொருது இடிப்பினும் – even if fast winds attack and hit, கதழ் உறை கடுகினும் – and even if heavy rains pour rapidly, உரும் உடன்று எறியினும் – even if thunder attacks with rage, ஊறு பல தோன்றினும் – even if many difficulties arise, பெருநிலம் கிளரினும் – even if the big land swells up, திரு நல உருவின் – her beautiful body, மாயா – undying, forever, இயற்கை – natural, பாவையின் – like a statue, like Kolli goddess, like a doll (இன் உருபு ஒப்புப் பொருளது), போதல் – to leave, ஒல்லாள் – she will not leave, என் நெஞ்சத்தானே – from my heart (நெஞ்சத்தான் – ஐந்தாவதன்கண் மூன்றாவது மயங்கிற்று, ஏ – அசைநிலை, an expletive)

பெரியாழ்வார் திருமொழி, மூன்றாம் பத்து, 7ம் திருமொழி, ஐய புழுதி, பாடல் 3
திவ்ய பிரபந்தம் 288, தாய் சொன்னது
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில! கோவிந்தனோடு இவளைச்
சங்கையாகி என் உள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே!

பெரிய திருமொழி, எட்டாம் பாத்து, 2ம் திருமொழி, தெள்ளியீர், பாடல் 9
திவ்ய பிரபந்தம் 1666, தாய் சொன்னது
முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிகன் என் செய்கேன்
கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளையென்று எண்ணப் பெறுவரே?