அன்றில் – Ibis

குறுந்தொகை 160, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்,
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்,  5
இஃதோ தோழி, நம் காதலர் வரைவே.

Kurunthokai 160, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine said to her friend
He has not come back in this cold
season with northerly winds,
when an ibis with a red head crest
like that of flame, cries along
with his mate with a shrimp-like
curved beak, from their nest
in the soaring thadā tree branch,
In the pitch darkness of night,
distressing those who are separated.

Is this how it is my friend,
waiting for my lover to marry me?

Notes:  பொருள் ஈட்டச் சென்ற தலைவன் வரைவு நீட்டிமையால் ஆற்றாளாகிய தலைவியை நோக்கித் தோழி ‘ அவர் வரைவர்’ என ஆற்றுவிப்புழித் தலைவி உரைத்தது.  செந்தலை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செந்தலையென்றது செஞ்சூட்டை.  தலை – ஆகுபெயர்.

Meanings:  நெருப்பின் அன்ன – like flame, செந்தலை அன்றில் – andril bird with a red head crest, Black Ibis also known as red-naped ibis – Pseudibis papillosa (தலை ஆகுபெயர்), இறவின் அன்ன – like shrimp, கொடுவாய்ப் பெடையொடு – with the curved beak female, தடவின் ஓங்கு சினை – thadā tree’s big branches, கட்சியில் – in the nest, பிரிந்தோர் – one who is separated, கையற – helpless, நரலு – cry, நள்ளென் யாமத்து – in the middle of the night with pitch darkness, பெருந்தண் வாடையும் – great cold season (உம்மை – உயர்வு சிறப்பு), வாரார் – he does not come, இஃதோ தோழி – is this how it is, நம் – our, காதலர் வரைவு – my lover coming to marry me, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 177, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கித்,
துறை நீர் இருங்கழி புல்லென்றன்றே,
மன்ற அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும், இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி, நாம் தன்  5
புலப்பினும், பிரிவு ஆங்கு அஞ்சித்,
தணப்பு அருங்காமம் தண்டியோரே.

Kurunthokai 177, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Ocean sounds have died down;
seashore groves are still;
and dark backwaters
with entry ports appear dull.
The andril bird that lives in
a palm tree calls out softly.

May you live long, my friend!
Despite your sulking, he will
come today fearing separation,
the man who has love for you
that is difficult to remove.

Notes:  தலைவனின் வரவு உணர்ந்து தோழி தலைவிக்கு உரைத்தது.  வருவர் கொல் – கலித்தொகை 11, நச்சினார்க்கினியர் உரை – வருவர் போல இருந்தது.  தண்டியோர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமையப் பெற்றோர்.  அமைந்தோர், ‘தண்டாக் காமம்’ என்னும் அதன் எதிர்மறையானும் உணர்க.  தண்டியோர் என்பதற்கு ‘அலைத்தும் பெற்றோர்’ எனப் பொருள் கூறினார் உ. வே. சா ஐயரவர்கள்.  அவர் கருத்தியபடி கருதினும் காமத்தை அலைத்தோர் என்பதால் அலைத்தும் பெற்றோர் என்பதற்கு இடமின்மை அறிக.

Meanings:  கடல் – ocean, பாடு – sounds, அவிந்து – died down, கானல் – seashore grove, மயங்கி – enchanted, துறை – port, நீர் – water, இருங்கழி – dark brackish waters, புல்லென்றன்று – appear to be dull, appear to be sad, ஏ – அசை நிலை, an expletive, மன்ற – of the town’s common grounds, அம் பெண்ணை – beautiful female palmyra trees, Borassus flabellifer, மடல் சேர் வாழ்க்கை – living in the palmyra fronds, அன்றிலும் – the black ibis, also known as red-naped ibis, Pseudibis papillosa or glossy ibis – Plegadis falcinellus, பையென – slowly, நரலும் – cries out, இன்று அவர்  வருவர் – he will come today, கொல் – அசை நிலை, an expletive, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி  – my friend, நாம் தன் புலப்பினும் – despite your sulking, பிரிவு ஆங்கு அஞ்சி – afraid of separation, தணப்பு அரும் – difficult to remove, காமம் – love, தண்டியோர் – the man who possesses, the man who owns, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 301, குன்றியனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இன மணி நெடுந்தேர்  5
வாராதாயினும், வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு,
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.

Kurunthokai 301, Kundriyanār, Neythal Thinai – What the heroine said to her friend
My eyes have abandoned sleep,
O friend!

Even through my lover’s tall chariot
with many bells does not come
with its wheels cutting into the earth
of the town’s square,
I hear the sounds as though he is
coming, in the middle of the night,
when a black-legged ibis, in her first
desirable pregnancy, ill, cries for her
mate from her twig nest on the thick
fronds of a bent palmyra tree with
a drum-like trunk.

Notes:  வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி கூறியது.

Meanings:  முழவு முதல் அரைய – with a drum-like trunk, தடவு – curved, நிலை – position, பெண்ணை – female palmyra tree, Borassus flabellifer, கொழு மடல் – thick frond/stem, இழைத்த – made, சிறு கோல் – small sticks, twigs, குடம்பை – nest, கருங்கால் அன்றில் – black-footed ibis, could be black ibis also called red-naped ibis – Pseudibis papillosa or the glossy ibis Plegadis falcinellus, காமர் – desirable, கடுஞ்சூல் – first pregnancy, வயவுப் பெடை – craving female, female with pregnancy sickness (வயா என்பது வயவு ஆயிற்று), அகவும் – calls, cries, பானாள் கங்குல் – middle of the night (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), மன்றம் போழும் – cutting the earth in the public place, இனமணி – many bells, நெடுந்தேர் – tall chariot, வாராதாயினும் – even if he doesn’t come, வருவது போல – as though he is coming, செவி முதல் – in my ears, இசைக்கும் – sounding, அரவமொடு – with noises, துயில் துறந்தனவால் – they have abandoned sleep (துறந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive), தோழி – O friend, என் – my, கண் – eyes, ஏ – அசை நிலை, an expletive

நற்றிணை 124, மோசி கண்ணத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

நற்றிணை 335, வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனை மிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே.

நற்றிணை 152, ஆலம்பேரி சாத்தனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது
மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்த தன் தலையும் பையென
வடந்தை துவலை தூவ குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென் கொல் அளியென் யானே.

நற்றிணை 218, கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்
மாயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றில் குரலே.

நற்றிணை 303, மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய்
நம் வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டு கொல் வாழி தோழி தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு நீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சத்தானே.

அகநானூறு 305, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
பகலினும் அகலாதாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக் கூரும் பைதல் பானாள்
பல்படை நிவந்த வறுமை இல்சேக்கை
பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளிலாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன் உளனே தோழி தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2560
விளரிக் குரல் அன்றில் மென் பேடை மேகின்ற முன்றில் பெண்ணை,
முளரிக் குரம்பை இது இதுவாக, முகில்வண்ணன் பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும்
தளரின் கொலோ அறியேன், உய்யல் ஆவது இத் தையலுக்கே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமடல், 165-170
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்து,
பின்னும் அவ் அன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோரீர் வாளாம் என் செய்கேன்.